இந்தியா

கேரள அரசு பணியாளர் தேர்வில் முறைகேடுகள் - நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் பாஜக வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: தமிழகத்​தின் தற்​போதைய ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்​லேகர், கேரள ஆளுநராக பதவி வகித்த போது, கேரள அரசு பணியாளர் தேர்​வாணை​யத்​தில் முறைகேடுகள் நடந்​த​தாக எழுந்த புகார்​களைத் தொடர்ந்து, அதன் தலை​வர் எம்.ஆர். பைஜுவைப் பத​வி​யி​லிருந்து நீக்​கம் செய்யுமாறு குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்முவுக்​கு் கடிதம் அனுப்​பினர்.

இந்​நிலை​யில், கேரள பாஜக மாநிலத் தலை​வர் ராஜீவ் சந்திரசேகர் தலை​மையி​லான குழு​வினர், திரு​வனந்​த​புரத்​தில் ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்​தூரைச் சந்​தித்​தனர். பின்​னர் செய்தியாளர்​களிடம் பேசிய பாஜக சட்​டப்​பேரவைக் குழுத் தலைவர் கோபகுமார், “பல ஆண்​டுகளாக அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தில் முறைகேடுகள் நடை​பெற்று வரு​கின்​றன. இது தொடர்​பாக 188 புகார்​கள் வந்​துள்​ள​தாக முதல்​வரே சட்​டப்​பேரவை​யில் தெரி​வித்​திருந்​தார். இருப்​பினும், இதுகுறித்து பாரபட் சமற்ற விசா​ரணைக்கு உத்​தர​விட அரசு தயாராக இல்லை.

தொடர்ந்து ஆட்​சி​யில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்​னணி (எல்​டிஎஃப்.), ஐக்​கிய ஜனநாயக முன்​னணி(யுடிஎஃப்.) அரசுகள் முறைகேடுகளை மறைக்க முயன்​றன. அந்த நடைமுறை தற்போதும் தொடர்​கிறது. பாஜக மற்​றும் இளைஞர் அணி யானயுவ மோர்ச்சா அளித்த புகார்​களை முன்​னாள் ஆளுநர் குடியரசுத் தலை​வருக்கு அனுப்​பிய பின்​னரே, குறைந்​த​பட்​சம் சில தேர்​வாணைய அதி​காரி​களை​யாவது கைது செய்ய அரசு முன்வந்தது. முறைகேடுகள் தொடர்​பான விசா​ரணை​யைத் தீவிரப்​படுத்த வேண்​டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்​தப்​பட்​டது” என்றார்.

இது​தொடர்​பாக, கேரள பாஜக தலை​வர் ராஜீவ் சந்​திரசேகர் வெளி​யிட்ட பதி​வில், “ராகுல் காந்தி நாடு முழு​வதும் மாணவர்களின் குரல் குறித்​துப் பேசுகிறார். ஆனால், கேரளத்​தில் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் ஊழல் மற்​றும் மாணவர்களுக்கு இழைக்​கப்​படும் அநீதி குறித்து அவர் கண்டுகொள்​ளாமல் இருக்​கிறார்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

இதற்​கிடையே, இந்த முறைகேடுகள் தொடர்​பாக, கேரள அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் முன்​னாள் துணைச் செயலர் சதீஷை குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT