இந்தியா

எனது வாகனத்தில் இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை: இ-20 எரிபொருளுக்கு பாஜக எம்.பி ஆதரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யா​வின் கச்சா எண்​ணெய் இறக்​கும​தியை குறைக்​க​வும் சுற்​றுச்​சூழல் மாசு​பாட்டை கட்​டுப்​படுத்​த​வும் இ-20 எரிபொருளை மத்​திய அரசு அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. இதற்கு எரிபொருளுக்கு நாடு முழு​வதும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது.

இது தொடர்​பாக உ.பி.யை சேர்ந்த பாஜக மாநிலங்​களவை எம்​.பி. பிரிஜ் லால் கூறிய​தாவது: இ-20 பெட்​ரோல் பாது​காப்​பானது. இதற்கு எதி​ராக தவறான பிரச்​சா​ரம் செய்​யப்​படு​கிறது. என்​னிட​மும் ஒரு வாக​னம் உள்​ளது. நானும் இதே எரிபொருளைத்​தான் பயன்​படுத்​துகிறேன். ஆனால் எனது வாக​னம் இது​வரை எந்​தப் பிரச்​சினையை​யும் சந்​தித்​த​தில்​லை.

இந்த எரிபொருள் பயன்​பாட்​டால் எனது வாக​னத்​தின் மைலேஜ் 3 முதல் 4 சதவீதம் வரை குறைவது உண்​மை​தான். ஆனால் இந்த எரிபொருள் நாட்​டுக்கு பெரும் தொகையை சேமிக்​கும். நமது எரிபொருள் தேவை​யில் 80 சதவீதத்தை நாம் இறக்​குமதி செய்கிறோம். இதில் 20 சதவீதம் எத்​த​னாலை கலப்​ப​தன் மூலம், வெளி​நாடு​களுக்​குச் செல்​லும் பணத்தை நம்​மால் சேமிக்க முடி​யும்.

இந்த எரிபொருளுக்கு எதி​ரான விமர்​சனங்​கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இதை எதிர்ப்​பவர்​கள் நாட்​டின் வளர்ச்​சிக்கு எதி​ரானவர்​கள். அவர்​கள் வெளி​நாட்டு சக்​தி​களால் இயக்​கப்​படு​பவர்​கள். இ-20 பெட்​ரோல் முற்​றி​லும் பாது​காப்​பானது. இவ்​வாறு பிரிஜ் லால்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT