பாஜக எம்​.பி. தரு​மபுரி அர்விந்த்

 
இந்தியா

“சுவேந்து அதிகாரியை போல் ரேவந்த் பாஜகவில் இணைவார்” - பாஜக எம்.பி.பேச்சால் சர்ச்சை

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்: ​பாஜக எம்​.பி. தரு​மபுரி அர்​விந்த், தெலங்கானாவில் காங்​கிரஸ் கட்​சி​யில் நடை​பெற்று வரும் உட்கட்சி பூசல் குறித்து கூறிய​தாவது:

தெலங்​கானா மாநிலத்​தில் எத்​தனையோ மூத்த காங்​கிரஸ் நிர்வாகி​கள் உள்​ளனர். ஆனால், தெலுங்கு தேசம் கட்​சி​யில் இருந்து காங்​கிரஸில் இணைந்த ரேவந்த் ரெட்​டிக்கு காங்​கிரஸ் கட்சி முதல்​வர் பதவியை வழங்கி தவறு செய்து விட்​டது. இதுவே உட்​கட்சி பூசலுக்கு காரண​மாகி உள்​ளது. இதனால் காங்​கிரஸ் பின்​னடைவை சந்​தித்து வரு​கிறது. 2028-ல் நடை​பெற உள்ள தேர்தலில் காங்​கிரஸ் மாபெரும் தோல்​வியை சந்​திக்​கும்.

மேற்கு வங்​கத்​தில் திரிண​மூல் காங்​கிரஸில் இருந்து வில​கிய சுவேந்து அதி​காரி, பாஜக​வில் இணைந்​தார். தற்​போது அவர் முதல்​வ​ராக பதவி​யேற்​றுள்​ளார். அவரை போலவே தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டி​யும் பாஜக.வுக்கு ஆதர​வாக செயல்​பட்டு வரு​கிறார். இவரும் சுவேந்து அதி​காரியை போல் பாஜக​வில் இணை​வார் என்று தெரி​கிறது. இதனால் 2028-ல் தெலங்​கா​னா​வில் காங்​கிரஸ் தோல்​வியை சந்​திக்​கும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT