பாஜக நியமன எம்​.பி மகேஷ் ஜெத்​மலானி

 
இந்தியா

மம்தாவை வெளியேற்ற பாஜக எம்.பி. வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்​கு​வங்க தேர்​தலில் தோல்​வியடைந்த திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர் மம்​தா, “தேர்​தலில் நாங்​கள் தோல்​வியடைய​வில்​லை, எங்​கள் வெற்றி திருடப்​பட்​டுள்​ளது. முதல்வர் பதவியை ராஜி​னாமா செய்ய மாட்டேன்” என கூறிவரு​கிறார்.

இது குறித்து பாஜக நியமன எம்​.பி.​யும், பிரபல வழக்​கறிஞரு​மான மகேஷ் ஜெத்​மலானி கூறும்போது, "மம்தாவின் நடத்தை மன்னிக்க முடி​யாதது. இது ஒட்​டுமொத்த ஜனநாயக நடை​முறைக்கு சவாலான செயல். தேர்​தல் முடிவு வெளி​யாகி​விட்​டால், முதல்​வர் பதவி முடிந்து விடு​கிறது. பதவியை ராஜி​னாமா செய்ய முடி​யாது என கூறு​வது அவம​திப்​பு. அவருக்கு பாடம் புகட்ட வேண்டும்.

வீண் பிடி​வாதம் செய்​வது அவரது நடத்​தை மம்தா தனது பதவியை ராஜி​னாமா செய்​ய​வில்லை என்​றால், அவரை ஆளுநர் பதவி நீக்​கம் செய்ய வேண்​டும். அத்​து​மீறும் மம்​தாவை காவல்​துறை​யினரை அனுப்பி வலுக்​கட்​டாய​மாக வெளி​யேற்ற வேண்டும்" என்றார்.

பதவி நீக்குங்கள்: மம்தா பானர்ஜி நேற்று கூறும்போது, "அவர்கள் என்னைப் பதவி நீக்கம் செய்யட்டும். அந்த நாளை ஒரு கருப்புத் தினமாக நான் கருதுவேன். தேர்தலுக்கு பிறகு நடந்த வன்முறை தொடர்பாக நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT