புதுடெல்லி: மும்பையில் தனது நிலத்தை அபகரித்ததாக பாஜக எம்எல்ஏ மீது பிரதமர் மோடியிடம், அவரது பள்ளித் தோழர் நேரில் சந்தித்து புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் ஸ்ரீகர் பர்தேஷி தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இதில், அஸ்கரலி வோரா, பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தா, பயந்தர் மாநகராட்சி ஆணையர் ராதா வினோத் சர்மா மற்றும் நகரத் திட்டமிடல் அதிகாரி புருஷோத்தம் ஷிண்டே ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான தனது உடைமையை கைவிடுவதாகவும், அதற்காக வழங்கப்பட்ட கட்டுமான அனுமதியை திரும்ப ஒப்படைப்பதாகவும் தெரிவித்து, நகரத் திட்டமிடல் துறையிடம் பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தா கடிதம் அளித்தார். இதையடுத்து, அந்த நிலம் அஸ்கரலி வோராவின் வசம் வந்தது.