இந்தியா

“ராகுல் முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” - பாஜக தலைவர் நிதின் விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், தனியார் செய்திச் சேனலுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அரசின் ஒரு அங்கம் ஆவார். ஆனால், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் மற்றும் மொழிநடையை உற்று நோக்குங்கள். ஒரு எதிர்க்கட்சித் தலைவர், அதுவும் ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் இத்தகைய முறையிலா பேசுவார் ?

ராகுல் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி, அவரது அரசியல் வளர்ச்சி ஏதோ ஒரு வகையில் முறையாக அமையவில்லை என்றே நான் நம்புகிறேன். கார்கே தனது கட்சி பாரம்பரியத்தின் வழிகாட்டியாக உருவெடுத்து வருகிறார். இதற்காக காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டித்து வருகின்றனர். என்றாலும் அக்கட்சி இன்னும் பாடம் கற்கவில்லை. இவ்வாறு நிதின் நவீன் கூறினார்.

SCROLL FOR NEXT