இந்தியா

டெல்லி உத்தம் நகர் வன்முறை: பாஜக மீது ராகுல் புகார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி உத்​தம் நகர் மக்​களை அமைதி காக்​கு​மாறு ராகுல் காந்தி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். வன்​முறையை தூண்​டு​வ​தாக பாஜக மீது குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

டெல்​லி​யின் உத்​தம் நகரில் கடந்த மார்ச் 4-ம் தேதி ஹோலி பண்​டிகை​யின்​போது இரு குடும்​பங்​களுக்கு இடையே ஏற்​பட்ட தனிப்​பட்ட மோதலில் 26 வயது இளைஞர் கொல்​லப்​பட்​டதை தொடர்ந்து சமூகப் பதற்​றம் நில​வு​கிறது. ரமலான் பண்​டிகை​யின்​போது அங்கு வன்​முறை நிகழலாம் என அச்​சத்​தில் சில குடும்​பங்​கள் அங்​கிருந்து வெளி​யேறி​யுள்​ளன. அப்​பகு​தி​யில் தற்​போது பலத்த போலீஸ் போடப்​பட்​டுள்​ளது.

          

இது தொடர்​பாக காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி வெளி​யிட்​டுள்ள ‘எக்​ஸ்’ பதி​வில், “உத்​தம் நகர் மக்​கள் வன்​முறைக்​காக பெரும் விலையை செலுத்​தி​யுள்​ளனர். அவர்​கள் இனிமேலும் ரத்​தக் களரியை விரும்​ப​வில்​லை. வன்​முறை, வெறுப்பை தூண்​டு​வதற்கு ஒவ்​வொரு வாய்ப்​பை​யும் பயன்​படுத்​திக்​கொள்​ளும் பாஜக மற்​றும் அதன் சார்பு அமைப்​பு​கள் மட்​டுமே இத்​தகைய ரத்​தக் களரியை விரும்​பு​கின்​றன.

நாட்​டின் வலிமை அதன் ஒற்​றுமை​யிலும் சகோ​தரத்​து​வத்​தி​லும் அடங்​கி​யிருப்​ப​தால், டெல்லி மக்​கள் எந்​த​வித​மான தூண்​டு​தல்​களுக்​கும் பலி​யாகி​விடக் கூடாது. அமைதி காக்க வேண்​டும்” என்​று கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT