இந்தியா

உ.பி. தேர்தலில் மகளிர் வாக்குகளை கவர 403 தொகுதிகளுக்கும் பெண் நிர்வாகிகளை நியமித்தது பாஜக

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்​தில் அடுத்​தாண்டு நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்​டு, பாஜக தலைமை மொத்​த​முள்ள 403 தொகு​தி​களுக்​கும் பெண் நிர்வாகிகளை நியமித்​துள்​ளது. உத்தர பிரதேசத்​தில் தேர்​தல் பிரச்சா​ரம் தொடங்​கு​வதற்கு முன்பாகவே அனைத்து மட்டங்களிலும் கட்​சியை முழு​மை​யாகத் தயார்​படுத்​தி, 2027 தேர்தல் களத்​தில் இறங்க பாஜக முன்னதாகவே திட்​ட​மிட்டு செயல்பட ஆரம்​பித்​துள்​ளது.

இதுகுறித்து பாஜக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: 2027-ம் ஆண்டு உத்தர பிரதேச சட்​டப்​பேர​வைத் தேர்​தலை எதிர்கொள்​ளும் வகையில், பாஜக இப்​போ​திலிருந்தே தனது அடிமட்ட கட்டமைப்பைப் பலப்​படுத்​தும் பணி​களைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஆலோ​சனைக் கூட்​டங்​கள், மாவட்ட வாரியான சுற்​றுப்​பயணங்​கள் மற்​றும் ‘மிஷன் 403’ எனும் பிரத்யேகத் திட்​டங்​களை பாஜக கையில் எடுத்​துள்​ளது.

கட்​சி​யின் அமைப்பு ரீதி​யான இடைவெளி​களைக் கண்​டறிந்​து, சட்டப்​பேர​வைத் தொகு​திப் பொறுப்​பாளர்​கள் மற்​றும் தேர்​தல் பொறுப்​பாளர்​களை நியமிக்​கும் பணி​கள் நடை​பெற்று வருகின்றன. கட்​சி​யின் மீது அதிருப்​தி​யில் உள்​ளவர்​கள் மற்​றும் வில​கிச் சென்​றவர்​களை மீண்​டும் இணைக்​க​வும், பல்​வேறு சமூகப் பிரி​வினரைச் சென்​றடைய​வும் சிறப்​புக் குழுக்​கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொகு​திக்கு ஒரு பெண் தலை​வர்

பெண் வாக்​காளர்​களைக் கவரும் வகை​யில் ‘மிஷன் 403’ என்ற முக்​கி​யத் திட்​டத்தை பாஜக தொடங்​கி​யுள்​ளது. மொத்​தம் உள்ள 403 தொகு​தி​களுக்​கும் தலா ஒரு பெண் நிர்​வாகி நியமிக்கப்பட்டுள்​ளார். வெறும் பொதுக்​கூட்​டங்​கள் மற்​றும் பிரச்சா​ரங்​களோடு நின்​று​வி​டா​மல், ஒவ்​வொரு வீட்​டுக்​கும் நேரடியாகச் சென்று பெண் வாக்​காளர்​களு​டன் நிலை​யான தொடர்பை ஏற்​படுத்​த​வும், அரசின் நலத்​திட்​டங்​களை அவர்களிடம் கொண்டு சேர்க்​க​வும் இவர்​கள் பணி​யாற்​று​வார்கள்.

கட்​சி​யின் மகளிர் அணியை மேலும் வலுப்​படுத்​தும் நோக்​கில், லக்​னோ​வில் மாநில அளவி​லான அமைப்பு ரீதி​யான பயிலரங்​கம் நடை​பெறவுள்​ளது. இதில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய​நாத், பாஜக மாநிலப் பொறுப்​பாள​ரும் தேசி​யப் பொதுச் செய​லா​ள​ரு​மான வினோத் தாவ்​டே, மாநிலத் தலை​வர் பங்​கஜ் சவுத்​ரி, மாநில இணைப் பொறுப்​பாளர் மேதா குல்​கர்னி மற்​றும் மகளிர் அணி மாநிலத் தலை​வர் சரோஜ் குஷ்​வாஹா ஆகியோர் பங்​கேற்று நிர்​வாகி​களுக்கு வழி​காட்ட உள்​ளனர். இவ்​வாறு பாஜக வட்​டாரங்​கள்​ தெரி​வித்​துள்​ளன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT