இந்தியா

வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் தண்டனை: மாநிலங்களவையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வந்தே மாதரம் பாடப்​படு​வதைத் தடுப்​பவர்​களுக்​கும், இடையூறு செய்​பவர்​களுக்​கும் தண்​டனை அளிக்​கும் ‘தேசிய கவுரவ அவம​திப்பு தடுப்பு (திருத்த) மசோ​தா, 2026’-ஐ, மத்​திய உள்​துறை இணை அமைச்​சர் நித்​யானந்த் ராய் நேற்று மாநிலங்களவையில் தாக்​கல் செய்​தார்.

இதன்​மூலம், தேசி​யப் பாடல் பாடப்​படும் போது வேண்​டுமென்றே தடுப்​பது அல்​லது குழப்​பம் விளைவிக்​கும் செயல்​களில் ஈடு​படு​வது இச்​சட்​டத்​தின் கீழ் குற்​ற​மாகக் கருதப்​படும்.

இந்​திய விடு​தலைப் போராட்​டத்​தில் மிக முக்​கியப் பங்​காற்​றிய வந்தே மாதரம் பாடலின் கண்​ணி​யத்​தை​யும், பெரு​மை​யை​யும் பாது​காப்​பதே இந்​தச் சட்​டத்​தின் நோக்​கம்.

இச்​சட்​டத்தை வரவேற்​றுப் பேசிய பார​திய ஜனதா கட்​சி​யின் மாநிலங்​களவை உறுப்​பினர் சஞ்​சய் சேத், “சமீப​கால​மாக தேசி​யப் பாடல் மக்​களிடையே பரவலான வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. எனவே அது எங்கு பாடப்​பட்​டாலும் அதற்​குரிய முழு பொது மரி​யாதை​யும் அளிக்​கப்பட வேண்​டும்” என்று கூறி​னார்.

ஆனால், இந்த நடவடிக்கை மக்​களின் அடிப்​படை உரிமை​களைப் பறிப்​ப​தாக அமை​யும் எனக் கூறி, எதிர்க்​கட்​சிகள் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. இந்த மசோதா தாக்​கல் செய்​யப்​படு​வதற்கு முன்​பே, மார்க்​சிஸ்ட் மாநிலங்​களவை உறுப்​பினர் ஜான் பிரிட்​டாஸ் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவுக்கு ஜூலை 19-ம் தேதி கடிதம் எழு​தி​யிருந்​தார்.

அதில், “இந்த முடிவை அரசு மறு​பரிசீலனை செய்ய வேண்​டும். வந்தே மாதரம் நமது சுதந்​திரப் போராட்​டத்​தின் முக்​கிய அடை​யாளம் என்​ப​தில் மாற்​றுக் கருத்து இல்லை எனக் குறிப்​பிட்​டுள்​ளார்.

ஆனால், அதைப் பாடு​வதைக் குற்​ற​வியல் சட்​டத்​துடன் இணைப்​பது தவறானது. மேலும், இந்​தச் சட்​டத்​திருத்​தம் பேச்​சுரிமை, தனிமனித சுதந்​திரம் மற்​றும் வழி​பாட்டு உரிமையை வழங்​கும் அரசி​யல்​சாசனப் பிரிவு​கள் 19, 21 மற்​றும் 25-க்கு எதி​ராக உள்​ளது.

நாடாளு​மன்​றம் தனி​யாகச் சட்​டம் இயற்​றி​யிருந்​தால் மட்​டுமே தேசப்​பற்றை வெளிப்​படுத்​து​வது கட்​டாய​மாகும். மற்​றபடி, குடிமக்​கள் கட்​டா​யம் தேசப்​பற்​றைக் காட்ட வேண்​டும் என அரசி​யல் சாசனம் கூற​வில்​லை.

இப்​படிப்​பட்ட குற்​ற​வியல் சட்​டங்​களை விரிவுபடுத்​து​வது, நாட்​டின் தேசபக்​திக்​கும், தனிமனித உரிமை​களுக்​கும் இடையே உள்ள சமநிலை​யைப் பாதிக்​கும்” என்று குறிப்​பிட்​டுள்​ளார். அதே​போல, ஆம் ஆத்மி கட்​சி​யின் மாநிலங்​களவை உறுப்​பினர் சஞ்​சய் சிங்​கும் இம்​மசோ​தாவுக்​குத்​ தனது எதிர்ப்​பைப்​ பதிவு செய்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT