இந்தியா

பிஹார் பள்ளி கட்டிடத்துக்கு தூணாக மாறிய பெஞ்சுகள்

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரின் தர்​பங்கா மாவட்​டம், அலிநகர் அருகே உள்ள கிராத்​பூர் கிராமத்​தில் அரசு ஆரம்பப் பள்ளி செயல்​படு​கிறது. இந்த பள்​ளி​யின் கட்​டிடம் மிக​வும் மோச​மாக சேதமடைந்து உள்ளது. அண்​மை​யில் கட்​டிடத்​தின் ஒரு தூண் இடிந்து விழுந்​தது.

இதைத் தொடர்ந்து மாணவர்​களின் இருக்​கைகள், பெஞ்சுகள், செங்​கற்​கள் ஆகிய​வற்றை அடுக்கி கட்​டிடம் கீழே சரி​யாமல் இருக்க தற்​காலிக ஏற்​பாடு செய்​யப்​பட்டு உள்​ளது. இதுகுறித்து உள்​ளூர் மக்​கள், ஆசிரியர்​கள் கூறிய​தாவது: கிராத்​பூர் அரசு ஆரம்​பப் பள்​ளி​யில் 190 மாணவ, மாண​வியர் கல்வி பயில்​கின்​றனர். 10 ஆசிரியர்​கள் பணி​யாற்​றுகின்​றனர். தற்​போது பள்​ளி​யில் 2 அறை​கள் மட்​டுமே உள்​ளன. இதில் ஓர் அறை அலு​வல​கப் பணிக்​காக பயன்​படுத்​தப்​படு​கிறது.

மற்​றொரு அறை​யில் 191 மாணவ, மாண​வியரும் அமர வைக்​கப்​பட்டு பாடங்​கள் நடத்​தப்​படு​கின்​றன. பள்ளி கட்​டிடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலை​யில் இருக்​கிறது. அண்மையில் ஒரு தூண் இடிந்து விழுந்​தது. இதனால் பெஞ்​சுகள், தூணாக மாற்​றப்​பட்டு உள்​ளது. மழைக்​காலங்​களில் பள்​ளிக் கட்டிடம் ஒழுகு​கிறது. பழைய கட்​டிடத்தை இடித்​து​விட்டு புதிய கட்​டிடம் கட்ட வேண்​டும். போ​திய வகுப்​பறை​களை கட்ட வேண்டும். இவ்​வாறு உள்​ளூர் மக்​கள், ஆசிரியர்​கள் தெரிவித்தனர்.

பிஹாரின் அலிநகர் தொகுதி எம்​எல்​ஏ​வாக மைதிலி தாக்​குர் பதவி வகிக்​கிறார். கிராத்​பூர் பள்ளி கட்​டிடத்​தின் அவலநிலை குறித்து சட்​டப்​பேர​வை​யில் அவர் எடுத்​துரைத்​தார்.

இதைத் தொடர்ந்து பழைய கட்​டிடத்தை இடித்​து​விட்டு புதிய கட்​டிடம் கட்ட பிஹார் அரசு உத்​தர​விட்டு உள்​ளது. இதுகுறித்து அரசு அதிகாரி​கள் கூறும்​போது, “பள்​ளி​யில் 191 மாணவர்கள் படிப்பதாக கணக்கு காட்​டப்​பட்டு உள்​ளது. ஆனால் எங்​களது ஆய்வில் 50 மாணவர்கள் மட்​டுமே வருகின்​றனர். மாணவர்​களின் பாது​காப்பு கருதி வேறு கட்​டிடத்​தில் பள்ளி செயல்​படு​கிறது. விரை​வில் புதிய கட்​டிடம்​ கட்​டப்​படும்​" என்​றனர்​.

SCROLL FOR NEXT