இந்தியா

கொச்சியில் தங்கியிருந்த வங்கதேசத்தினர் 6 பேர் கைது

செய்திப்பிரிவு

கொச்சி: கேரளா​வின் கொச்சி மாவட்​டத்​தில் உள்ள எரூர் பகுதியில் போலீ​ஸார் சோதனை நடத்தி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 6 பேரை கைது செய்​தனர். விசாரணை​யில் தாங்​கள் வங்​கதேசத்​தினர் என்​பதை அவர்​கள் ஒப்​புக் கொண்​டனர்.

அவர்​களிடம் உளவுத்​துறை அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர். அவர்​கள் மீது குடி​யுரிமை மற்​றும் வெளி ​நாட்​டினர் சட்​டம் மற்​றும் பிஎன்​எஸ் சட்​டத்​தின் பல பிரிவு​களின் கீழ் வழக்​குப் ​ப​திவு செய்யப்​பட்​டது. அவர்​களை நீதி​மன்​றத்​தில் போலீ​ஸார் ஆஜர்படுத்​தவுள்​ளனர்​.

SCROLL FOR NEXT