இந்தியா

அனுமன் மந்திரங்கள் ஓதி இந்துத்துவா அமைப்பினர் கிறிஸ்தவ தேவாலயங்கள் முன் ஆர்ப்பாட்டம்

உ.பி., ஹரியானாவின் இரு நகரங்களில் பதற்றம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உ.பி.​யின் பரேலி நகரில் ராணுவக் குடி​யிருப்பு பகு​தி​யில் செயின்ட் அல்​போன்​சஸ் கதீட்​ரல்தேவால​யம் உள்​ளது. இங்கு கிறிஸ்​து​மஸ் தினத்தை முன்​னிட்டு நேற்று பள்ளி குழந்​தைகளின் கலை நிகழ்ச்சி நடை​பெற்​றது.

இதில் ஒரு கிறிஸ்​தவப் பள்ளி மாணவர்​களால் ஆட்​சேபனைக்​குரிய நாடகம் அரங்​கேற்​றப்​பட்​ட​தாக புகார் எழுந்​தது. இந்து மதம் மற்​றும் சமூகத்தை தவறாகச் சித்​தரித்து அவமானப்​படுத்த முயன்​ற​தாக கூறி அந்த தேவால​யம் முன் பஜ்ரங் தளம் அமைப்​பினர் நேற்று ஆர்​ப்பாட்​டம் நடத்​தினர். தேவால​யத்​தின் பிர​தான வாயி​லில் நின்​று, அனு​மன் மந்​திரங்​களை ஓதி, ஜெய் ஸ்ரீராம், ஹர் ஹர் மகாதேவ் உள்​ளிட்ட முழக்​கங்​களை அவர்​கள் எழுப்​பினர். இதனால் அப்​பகு​தி​யில் பதற்​றம் உரு​வான​தால் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டனர்.

இதையடுத்​து, பஜ்ரங் தளம் நிர்​வாகி​கள் காவல் ஆணை​யரிடம் அளித்த மனுவில், இந்த விவ​காரம் குறித்து முழு விசா​ரணை நடத்​த​வும், மத உணர்​வு​களைப் புண்​படுத்​தி​ய​வர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​க​வும் வலி​யுறுத்​தினர். ஹரி​யா​னா​வின் ஹிசார் நகரில் 160 ஆண்​டு​கள் பழமை​யான செயின்ட் தாமஸ் தேவால​யம் உள்​ளது. இதற்கு நேர் எதிரிலுள்ள கிராந்​தி​மான் பூங்​கா​வில் ‘இந்து சக்தி சங்​கமம்’ எனும் பெயரில் விஸ்வ இந்து பரிஷத் மற்​றும் பஜ்ரங் தளம் அமைப்​பினர் ஒரு நிகழ்ச்சி நடத்​தினர்.

இதில் சுவாமி ஸ்ரத்​தானந்தா எனும் துற​வி​யின் தியாக தினத்தை நினை​வு​கூரும் வகை​யில் ஹோமம் நடத்​தி, அனு​மன் மந்​திரங்​கள் ஓதப்​பட்​டன.

அப்​போது கிறிஸ்​து​மஸ் சிறப்பு பிரார்த்​தனைக்கு வந்த கிறிஸ்​தவர்​கள் திரளாகக் கூடி அதற்கு எதிர்ப்பு தெரி​வித்​தனர். இதனால் இரு தரப்​பினர் இடையே மோதல் ஏற்​படும் சூழல் உரு​வானது. இதையடுத்து அங்கு பாது​காப்பு அதி​கரிக்கப்பட்டது.

பிறகு நிலை​மையை கட்​டுப்​படுத்த இரு டி.எஸ்​.பி.க்​கள் சமரசத்​திற்​காக நியமிக்​கப்​பட்​டனர், தொடர்ந்து நீடிக்​கும் பதற்​றத்தை தணிக்க மேலும் 3 கம்​பெனி​யின் சுமார் 250 காவலர்கள் அங்கு பாது​காப்பு பணி​யில் அமர்த்​தப்​பட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT