இந்தியா

மகர மேளாவில் போராட்டத்தை கைவிட்டார் அவிமுக்தேஷ்வர்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உ.பி.​யின் பிர​யாக்​ராஜ், திரிவேணி சங்கமத்தில் மகர மேளா நடை​பெறுகிறது.

இங்கு கடந்த ஜனவரி 18, மவுனி அமா​வாசை நாளில் உத்தராகண்ட் மாநிலம் ஜோதிஷ்வர் மடத்​தின் சங்​க​ராச்​சா​ரி​யார் சுவாமி அவி​முக்​தேஷ்வ​ரானந்த் தனது சீடர்​கள் மற்​றும் ஆதரவாளர்​களு​டன் கங்கை நதி​யில் புனித நீராட பல்​லக்​கில் வந்தார். அப்​போது அவரை தடுத்து நிறுத்தி அதி​காரி​கள் அதிக கூட்​டம் காரண​மாக புனித நீராடலுக்கு நடந்தே செல்ல வலியுறுத்தினர்.

          

அப்​போது அவரது ஆதர​வாளர்​களு​டன் தள்​ளு​முள்ளு மற்றும் மோதல் ஏற்​பட்​டது. இதையடுத்து உள்​ளூர் நிர்வாகத்தைக் கண்டித்து அவி​முக்​தேஷ்வர் தனது முகாமில் தர்ணா நடத்தி வந்தார். இந்​நிலை​யில் அவி​முக்​தேஷ்வர் நேற்று முன்​தினம் தனது போராட்​டத்தை முடித்​துக் கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகை​யில், “மகர மேளா​வில் இருந்து நான் கனத்த இதயத்​துடன் வெளி​யேறுகிறேன். இங்கு நான் பட்ட இன்னல்​கள் மற்​றும் வேதனை​களை வார்த்​தைகளால் விவரிக்க இயலாது. சங்​கமத்​தில் நீராடு​வது என்​பது உள்​ளத்​தின் திருப்திக்கான ஒரு வழி. ஆனால் எனது மனம் மிக​வும் வருத்தத்தில் இருப்​ப​தால் நீரா​டா​மலேயே இங்​கிருந்து செல்கிறேன்” என்​றார்.

இதுகுறித்து சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தளத்​தில், "சனாதன மரபு​களுக்கு பாஜக பெரும் தீங்கு விளைவிக்கிறது. பண்​டைய காலம் முதலாக தொடரும் ஒரு மரபை பாஜக முறித்​து​விட்​டது. ஊழல் வழி​யில் பெற்ற அதிகாரத்தின் பெரு​மை​யால் பாஜக போதை​யில் இருக்​கிறது. துறவி​களின் மனதைப் புண்​படுத்​து​வது நன்​மையை அளிக்​காது. துறவி​களின் இதயங்​களைப் புண்​படுத்​து​வதன் மூலம் யாரும் மகிழ்ச்சி அடைய முடி​யாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT