அசாம் முதல்​வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

 
இந்தியா

8-வது ஊதியக் குழு அமைக்கும் முதல் மாநிலம் அசாம்

செய்திப்பிரிவு

குவஹாட்டி: மத்​திய அரசுக்​குப் பிறகு தனது ஊழியர்​களின் ஊதி​யக் கட்​டமைப்பை திருத்​து​வதற்​காக 8-வது ஊதி​யக் குழுவை அமைக்​கும் முதல் மாநிலம் என்ற பெரு​மையை அசாம் பெற்​றுள்​ள​தாக முதல்​வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறுகை​யில், “மத்​திய அரசு ஏற்​கெனவே ஊதி​யக் குழுவை அமைத்​து​விட்​டது. ஆனால், அதற்​குப் பிறகு எந்த மாநில அரசும் ஊதி​யக்​குழுவை இது​வரை அமைக்​க​வில்​லை. அதை அமைக்​கும் நாட்​டின் முதல் மாநிலம் என்ற பெருமை அசா​முக்கு தற்​போது கிடைத்​துள்​ளது. இது ஊழியர்​களின் நலன் மற்​றும் முற்​போக்​கான நிர்​வாகத்தை நோக்​கிய ஒரு குறிப்​பிடத்​தக்​க படி​யாகும்” என்​றார்​.

SCROLL FOR NEXT