அசாம் சட்டப்பேரவை
திருமலை: அசாம் மாநில அரசு குவாஹாட்டி நகரில் ஏழுமலையான் கோயில் கட்ட 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளது.
அசாமில் உள்ள குவாஹாட்டியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோயில் கட்ட தீர்மானித்துள்ளது. இதற்காக நிலம் ஒதுக்குமாறு அசாம் மாநில அரசுக்கு தேவஸ்தானம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அசாம் அரசு குவாஹாட்டியில் முதலில் 10.8 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. ஆனால், 25 ஏக்கர் நிலம் இருந்தால் கோயில் மிகவும் பிரம்மாண்டமாக கட்ட முடியும் என திருப்பதி தேவஸ்தானம் நினைத்தது. இத்தகவலை முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு அசாம் மாநில முதல்வருக்கு சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார். இதனைத் தொடர்ந்து கோயிலுக்காக தற்போது 25 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளதாக அசாம் மாநில அரசு உறுதி பட தேவஸ்தானத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.
விரைவில் குவாஹாட்டியில் ஏழுமலையான் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என பிஆர் நாயுடு தெரிவித்துள்ளார்.