இந்தியா

அசாம் பாஜகவில் மீண்டும் சீட் வழங்காததால் அதிருப்தி: கடைசி நாளில் காங்கிரஸில் சேர்ந்து மனுத் தாக்கல் செய்த அமைச்சர்

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அ​சாம் மாநில கேபினட் அமைச்​சர் நந்​திதா கர்​லோ​சாவுக்கு பாஜக மீண்​டும் சீட் வழங்​காத​தால், அவர் காங்​கிரஸ் கட்​சி​யில் இணைந்து கடைசி நாளில் வேட்பு மனு தாக்​கல் செய்​துள்​ளார். அசாம் மாநிலத்​தில் அடுத்த மாதம் 9-ம் தேதி சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறுகிறது.

இங்கு திமா ஹசோ மாவட்​டத்​தின் ஹப்​லாங் தனித் தொகுதி பாஜக எம்​.எல்​.ஏ.​வாக இருந்​தவர் நந்​திதா கர்லோசா. இவர் பாஜக அமைச்​சர​வை​யில் கேபினட் அமைச்​ச​ராக இருந்​தார். இந்த முறை ஏற்​கெனவே எம்​.எல்​.ஏ.க்​களாக இருந்த பலருக்கு பாஜக மீண்​டும் வாய்ப்பு வழங்​க​வில்​லை. சில புதி​ய​வர்​களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்​டது.

          

ஹப்​லாங் தொகு​தி​யில் நந்​திதா கர்​லோ​சவுக்கு பதிலாக ரூபாலி லங்​தசா என்​பவர் பாஜக வேட்​பாள​ராக அறிவிக்கப்​பட்​டார். இதையடுத்து பாஜக கட்​சி​யில் இருந்து வில​கிய நந்​தி​தா, காங்​கிரஸ் கட்​சி​யில் நேற்று முன்​தினம் இணைந்​தார். காங்​கிரஸ் கட்சி ஏற்​கெனவே ஹப்​லாங் தொகுதி வேட்​பாள​ராக நிர்​மல் என்​பவரை அறிவித்​திருந்​தது. வேட்பு மனு தாக்​கல் செய்ய நேற்று கடைசி நாள்.

பாஜக.​வில் அமைச்​ச​ராக இருந்து பிரபல​மான நந்​திதா கர்லோசா காங்​கிரஸ் கட்​சி​யில் இணைந்​துள்​ள​தால், இவரையே ஹப்​லாங் தொகுதி வேட்​பாள​ராக நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்​தது. இதையடுத்து அவர் நேற்று ஹப்​லாங் தொகுதி காங்​கிரஸ் வேட்​பாள​ராக மனு செய்தார். இவரது வரவால் ஹப்​லாங் பழங்​குடி​யினர் தொகு​தி​யில் காங்​கிரஸ் கட்​சி​யின் செல்​வாக்கு அதிகரிக்கும் என கூறப்​படு​கிறது. இவர் பாஜக.​வில் இருந்து வெளி​யேறியது, அக்​கட்​சிக்​கு பின்​னடை​வாக பார்க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT