இந்தியா

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் 100 ஆக உயர்வு

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அ​சாமில் தொடர் வெள்​ளப்​பெருக்​கால் உயிரிழந்தவர்​களின் எண்​ணிக்கை 100 ஆக உயர்ந்​துள்ள நிலையில், 10 மாவட்​டங்​களைச் சேர்ந்த 1.37 லட்​சத்​துக்​கும் அதிகமான மக்​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இது தொடர்​பாக அசாம் மாநில பேரிடர் மேலாண்​மைத் தகவல் மையம் ஓர் அறிக்கை வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, கோலா​காட், சிவ​சாகர், ஹோஜாய், தர்​ராங், லக்​கீம்​பூர், ஜோர்​ஹாட், கார்பி ஆங்​லாங், சராடியோ, நகோன் மற்​றும் விஸ்​வ​நாத் ஆகிய 10 மாவட்​டங்​கள் வெள்​ளத்​தால் சூழப்​பட்​டுள்​ளன. இங்​குள்ள 28 வருவாய் வட்​டங்​களும், 456 கிராமங்​களும் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. கோலா​காட் மாவட்​டத்​தில் அதி​கபட்​ச​மாக 68,239 பேர் பாதிக்கப்பட்​டுள்​ளனர்.

சிவ​சாகர் மாவட்​டத்​தில் 39,495, ஜோர்​ஹாட் மாவட்​டத்​தில் 16,259 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். மாநிலம் முழு​வதும் 11,933 ஹெக்டேர் விவ​சாய நிலங்​கள் நீரில் மூழ்​கி​யுள்​ளன. மத்திய நீர் ஆணையம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, தான்சிரி ஆறு கோலாகாட் மற்றும் நுமாலிகர் பகுதிகளில் அபாயக் கட்டத்தைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. குஷியாரா ஆறும் ஸ்ரீபூமி பகுதியில் அபாயக் கட்டத்தைத் தாண்டி வழிகிறது.

வெள்ளப் பாதிப்பால் 125 நிவாரண முகாம்களும், விநியோக மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் சுமார் 8,000 பேர் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3,592 ஆண்கள், 3,437 பெண்கள் மற்றும் 919 குழந்தைகள் அடங்குவர். வெள்ளப் பகுதிகளில் 59 மருத்துவக் குழுக்கள் முகாமிட்டுள்ளன. மேலும் 10 மீட்புப் படகுகள் மூலம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

SCROLL FOR NEXT