அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா | உள்படம் - எம்.பி கவுரவ் கோகோய்
குவாஹாட்டி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாவின் குடும்பத்தினர் மாநிலம் முழுவதும் சுமார் 12,000 பிகா (சுமார் 3,960 ஏக்கர்) நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான கவுரவ் கோகோய் அண்மையில் குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை ஹிமந்த பிஸ்வா சர்மா மறுத்திருந்தார். இந்நிலையில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கவுரவ் கோகோய், ஜிதேந்திர சிங் மற்றும் பூபேஷ் பாகேல் மீது ஹிமந்த பிஸ்வா சர்மா அவதூறு வழக்கு (சிவில் மற்றும் கிரிமினல்) தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், “காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. அரசியல் உள்நோக்கம் கொண்டவை. மக்களை தவறாக வழி நடத்தும் நோக்கம் கொண்டவை" என கூறியுள்ளார். மேலும் அவர் இந்த வழக்கில் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கோரியுள்ளார்.