இந்தியா

அசாம் பேரவை தேர்தல்: பாஜக 88 வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அசாம் மாநிலத்​தில் உள்ள 126 சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு அடுத்த மாதம் 9ம் தேதி ஒரே கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இந்​நிலை​யில் வேட்​பாளர்​களை தேர்வு செய்ய பாஜக மத்​திய தேர்​தல் குழு கூட்​டம் டெல்​லி​யில் நேற்று முன்தினம் நடை​பெற்​றது.

இதில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலை​வர் நிதின் நபின் உட்பட பலர் கலந்து கொண்​டனர். இதையடுத்து 88 வேட்​பாளர்​கள் அடங்​கிய முதல் பட்​டியலை பாஜக நேற்று வெளி​யிட்​டது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஜல்​பைகுரி தொகு​தி​யில் இருந்து தொடர்ந்து 6-வது முறை​யாக போட்​டி​யிடு​கிறார்.

காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்து பாஜக.​வில் இணைந்த பிரத்​யுத் பர்தோலாய் மற்​றும் பூபென் போரா ஆகியோர் முறையே திஸ்​புர் மற்​றும் பியூரியா தொகுதி வேட்​பாளர்​களாக நிறுத்​தப்​பட்​டு உள்ளனர். இந்​நிலை​யில் காங்​கிரஸ் கட்சி 22 வேட்​பாளர்​கள் அடங்கிய 3-வது பட்​டியலை நேற்று வெளி​யிட்​டது. காங்​கிரஸ் கட்சி இது​வரை மொத்​தம் 87 வேட்​பாளர்​களின் பட்​டியலை வெளியிட்​டுள்​ளது.

          
SCROLL FOR NEXT