அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு
புதுடெல்லி: டெல்லியில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 3 இளம் பெண்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் கடந்த 20ம் தேதி பழுதுபார்ப்பு வேலையின் போது ஏற்பட்ட தூசியால் கீழ் வீட்டில் வசிக்கும் ஹர்ஷ் சிங், அவரது மனைவி ரூபி ஜெயின் ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் இவர்கள் இருவரும் அப்பெண்களை இன ரீதியாக அவமதித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவர் மீதும் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் மாளவியா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு வெளியிட்ட ‘எக்ஸ்' பதிவில், "டெல்லியில் வசிக்கும் எங்கள் 3 சகோதரிகள் இன ரீதியாக அவமதிக்கப்பட்ட செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறியுள்ளார்.