கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்.பி. மஹுவா மொய்த்ரா பெண்களை அவமதிக்கும் வகையிலும், வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவும் சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டதாக பாஜக நிர்வாகி ஒருவர் போலீஸில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி கிருஷ்ணாநகர் நீதிமன்றம் மஹுனா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பியது. பலமுறை சம்மன் அனுப்பியும் மஹுவா விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.