இந்தியா

புகையை மூட்டை கட்டியா டெல்லிக்கு அனுப்புகிறோம்? - பாஜகவுக்கு ஆம் ஆத்மி பதிலடி

செய்திப்பிரிவு

சண்டிகர்: டெல்லியின் காற்று மாசுபாட்​டுக்கு பஞ்​சாபில் பயிர்க்​கழிவு​கள் எரிக்​கப்​படுவதே காரணம் என்ற பாஜக​வின் குற்றச்சாட்​டுக்கு, ஆம் ஆத்மி கட்சி தலை​வர்​கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

டெல்லி அமைச்சர் கபில் மிஸ்ராவின் குற்​றச்​சாட்​டுகள் “அப்பட்டமான பொய்” எனப் பஞ்​சாப் நிதி​யமைச்​சர் ஹர்​பால் சிங் சீமா மறுத்​துள்​ளார். பஞ்​சாபுக்​கும் டெல்​லிக்​கும் நடுவே 300 கி.மீ. தூரத்​தில் ஹரியானா இருக்​கும்​போது, பஞ்​சாப் புகை மட்​டம் எப்​படி டெல்​லிக்கு வரும். “புகையை மூட்டை கட்​டியா டெல்​லிக்கு அனுப்​புகிறோம்?” எனக் கிண்​டலடித்த அவர், ஹரியானா புகை பாகிஸ்தானுக்குச் செல்கிறதா? அதை ஏன் பாஜக கண்டுகொள்வதில்லை என்​றும் சாடினார்.

பஞ்​சாப் விவசாயிகளின் பெயரைக் கெடுக்க பாஜக திட்​ட​மிட்டு செயல்​படுவ​தாக ஆம் ஆத்மி தலை​வர் பல்​தேஜ் சிங் பன்னு குற்றம் சாட்​டியுள்​ளார்.டெல்​லி​யின் காற்று மாசு இப்​போது இரு கட்​சிகளுக்​கும் இடையே பெரிய அரசி​யல் மோதலாக மாறியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT