இந்தியா

2005-ல் விண்ணப்பித்தவருக்கு ஓய்வு பெறும் வயதில் அரசு வேலைக்கு நியமன கடிதம்

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: அரசு வேலைக்​கான பணி நியமன கடிதம் என்பது பொது​வாக வேலை தேடு​பவர்​களுக்கு மகிழ்ச்​சி​யான தருணம் ஆகும். ஆனால், கேரளாவைச் சேர்ந்த ஒரு​வருக்கு 18 ஆண்​டு​களுக்​குப் பிறகு, அவரது ஓய்​வு​பெறும் வயதில் பணிநியமன கடிதம் கிடைத்​துள்​ளது.

கேரள மாநிலம் மலப்​புரம் மாவட்​டம் காளி​காவு பகு​தி​யைச் சேர்ந்த அப்​துல் மஜீத்​துக்​கு, மாநில பொதுச்​சேவை ஆணையத்திடம் (பிஎஸ்​சி) இருந்து பணி நியமன பரிந்​துரைக் கடிதம் கடந்த மாதம் கிடைத்​துள்​ளது. பகு​திநேர இளநிலை அரபு மொழி ஆசிரிய​ராக நியமனம் செய்​யப்​பட்​டிருப்​ப​தாக கூறப்பட்டிருந்த அந்​தக் கடிதத்​தைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்​தார். ஏனெனில், மஜீத் 2005-ம் ஆண்டு (20 ஆண்டுக்கு முன்​பு) பிஎஸ்சி தேர்வு எழுதியிருந்தார்.

மேலும் அவர் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட தரவரிசைப் பட்​டியல் 2008-லேயே காலா​வ​தி​யாகி​விட்​டது என்​பது​தான் சுவாரஸ்​யம்.

இதுகுறித்து அப்​துல் மஜீத் கூறும்​போது ‘‘இந்த பணி நியமனக் கடிதத்தை அனுப்ப பிஎஸ்​சி-க்கு 18 ஆண்​டு​கள் ஆகி​யுள்​ளது. இந்த வேலை தற்​போதைய நிலை​யில் எனக்கு எந்​தப் பயனும் தராத அளவுக்​குத் தாமத​மாக வந்​துள்​ளது. எனக்கு 60 வயதைக் கடந்த பிறகு, அரசு வேலை கிடைக்​கும் என்ற எண்​ணமே எனக்​குள் இல்லாமல் போய்​விட்​டது’’ என வேதனை​யுடன் தெரி​வித்​துள்​ளார்.

தொடர்ச்​சி​யான அறி​விப்​பு​கள் மற்​றும் ஆட்​சேர்ப்பு முயற்சிகளுக்குப் பிறகும், தகு​தி​யான நபர்​கள் கிடைக்​காமல் காலி​யாக இருந்த ஒரு பணி​யிடத்​துக்​காகவே தற்​போது மஜீத்துக்கு இந்​தக் கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ளது. பிஎஸ்சி கடிதம் கிடைத்த 3 மாதங்​களுக்​குள் தேவை​யான ஆவணங்​களைச் சமர்ப்பித்து பணி​யில் சேர வேண்​டும். ஆனால், மஜீத்​தின் பள்​ளிச் சான்​றிதழின்​படி அவரது பிறந்த தேதி மே 27, 1966. இதன் மூலம் அவர் ஏற்​கெனவே நிர்​ண​யிக்​கப்​பட்​ட ஓய்​வு​பெறும்​ வயதைக்​ கடந்து​விட்​ட​தால்​ இந்​த நியமனத்துக்கு தகு​தி​யற்​றவர்​ ஆகிறார்​.

SCROLL FOR NEXT