இந்தியா

சூப்​பர் ஹீரோக்​களை விட அனு​மன், அர்​ஜுனன், கர்​ணன் போன்​றோர் சக்தி வாய்ந்​தவர்​கள்: சந்திரபாபு நாயுடு அறிவுரை

என். மகேஷ்குமார்

திருப்பதி: திருப்​ப​தி​யில் உள்ள மத்​திய சம்ஸ்​கிருத பல்​கலைக்​கழக வளாகத்​தில் 29-ம் தேதி வரை நடை​பெற உள்ள பார​திய அறி​வியல் சம்​மேளனத்தை நேற்று ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, மத்​திய அமைச்​சர் ஜிதேந்​தர் சிங் மற்​றும் ஆர் எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் ஆகியோர் குத்து விளக்​கேற்றி தொடங்கி வைத்​தனர்.

அப்​போது சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: நம்​முடைய புராணங்​கள், இதி​காசங்​கள் குறித்து நம் பிள்​ளை​களுக்கு சிறு வயது முதலே நாம் சொல்லி கொடுக்க வேண்​டும். ஸ்பைடர் மேன், சூப்​பர் மேன், பேட் மேன், அயர்ன் மேன் போன்ற சூப்​பர் ஹீரோக்​களை விட நமது அனு​மன், அர்​ஜுனர், கர்​ணன் போன்​றோர் பன்​மடங்கு சக்தி வாய்ந்​தவர்​கள் என்​பதை அவர்​களுக்கு எடுத்​துரைக்க வேண்​டும்.

அவதார் சினி​மாவை விட நம் மகா​பாரதம், ராமாயணம் மிக​வும் பிரம்​மாண்​டம் என்​பதை புரிய வைக்க வேண்​டும். அது நமது கடமை​யாகும்.

மேலும், அதில் யார் கெட்​ட​வர்​கள், நல்​ல​வர்​கள் என்​ப​தை​யும் பிள்​ளை​களுக்கு அறி​வுறுத்த வேண்​டும். என்​.டி. ராமா​ராவ் பல புராண படங்​களில் நடித்து புராண கதா​பாத்​திரங்​களை மக்​களின் கண் முன் நிற்க வைத்​தார். இதனால் மக்​களுக்கு எளி​தில் புரிந்து கொள்ள முடிந்​தது. நம்​முடைய கலாச்​சா​ரங்​கள், புராண காலத்​திலேயே இருந்த அறி​வியல் ஞானம் போன்​றவை ஆச்​சர்​யப்​படுத்​துகிறது.

நம் நாடு பிரதமர் மோடி​யின் தலை​மை​யில் பலம் வாய்ந்த நாடாக எழுச்சி கொண்டு வரு​கிறது. 2038-ல் உலகிலேயே 3-ம் வல்​லரசு நாடாக இந்​தியா இருக்​கும். 2047ல் உலக நாடு​களில் சக்தி வாய்ந்த நாடாக மாறும். இவ்​வாறு சந்​திர​பாபு பேசி​னார்.

ஆர் எஸ் எஸ் தலை​வர் மோகன் பாகவத் பேசுகை​யில், ‘‘நம்​முடைய அனுபவமே பல அறி​வியல் அறி​வு​களை வளர்க்​கிறது. நாம் எடுத்து கொள்​ளும் மார்​கம் சரி​யான​தாக இருந்​தால், லட்​சி​யத்தை அடைந்து விடலாம்’’ என்றார்.

SCROLL FOR NEXT