இந்தியா

​திருப்பதி தேவஸ்தான அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத நகை, பணம், வெள்ளி பொருட்​கள் பறி​முதல்

என்.மகேஷ்குமார்

திரு​மலை: திருப்பதி தேவஸ்தான அதிகாரி​யின் வீடு உட்பட 5 இடங்​களில் லஞ்ச ஒழிப்​புத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்தினர். அப்​போது கணக்​கில் வராத சொத்து பத்​திரங்​கள், நகை, பணம் மற்​றும் வெள்ளி பொருட்​களை அதி​காரி​கள் பறிமுதல் செய்​தனர்.

திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் ஏழு​மலை​யான் கோயில் இணை நிர்​வாக அதி​காரி​யாக பணி​யாற்றி வருபவர் லோக​நாதம். இவர் திரு​மலை​யில் ஏழு​மலை​யான் கோயிலுக்​குள் பணி​யாற்றி வரு​கிறார். உயர் பதவி​யில் இருக்​கும் இவர் வரு​மானத்​துக்கு அதிக​மாக சொத்து சேர்த்​த​தாக புகார் எழுந்​தது.

இது தொடர்​பாக இவரின் திருப்​பதி தொட்​டாபுரம் வீடு, திரு​மலையில் இவருக்​கென ஒதுக்​கப்​பட்ட பி-53 குடி​யிருப்​பு, இவரது மைத்​துனர்​கள் இரு​வரின் வீடு, செல்​லூர் கிராமத்​தில் உள்ள உறவினர் வீடு என மொத்​தம் 5 இடங்​களில் நேற்று சோதனை நடை​பெற்​றது. திருப்​பதி லஞ்ச ஒழிப்​புத்​துறை டிஎஸ்பி ஸ்ரீநி​வாச ராவ் தலை​மை​யில் அதி​காரி​கள் மற்​றும் போலீ​ஸார் இந்த சோதனையை மேற்​கொண்​டனர்.

மேலும், திருப்​பதி எஸ்​டிவி நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்​கி​யில் இவரது லாக்​கரிலும் சோதனை செய்​தனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்​புள்ள அசையா சொத்​துகளின் பத்​திரங்​கள், தங்க, வைர நகைகள், வீட்டு மனை பட்​டாக்​கள், வெள்ளி பாத்​திரங்​கள், ரொக்​கம் என வரு​மானத்​துக்கு அதி​க​மாக இவர் சொத்து சேர்த்​துள்​ளது உறு​தி​யாகி உள்​ளது.

இதையடுத்​து, கணக்​கில் வராத அனைத்​தை​யும் அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர். எனினும் அவற்​றின்​ மதிப்​பு எவ்​வளவு? என்​ற விவரம்​ உடனடி​யாக தெரி​விக்​கப்​படவில்​லை.

SCROLL FOR NEXT