இந்தியா

டெல்லியில் இண்டியா கூட்டணியை விமர்சித்து வைக்கப்பட்டுள்ள அனாமதேய பேனர்கள்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: டெல்லியில் இண்டியா கூட்டணிக் கட்​சிகளின் கூட்டம் நேற்று நடை​பெற்​றது. இதை முன்​னிட்டு அக்​கட்​சிகளின் தலைவர்​களை விமர்​சித்து அனாமதேய பேனர்​கள் நகர் முழுவதும் ஆங்​காங்கே காணப்​பட்​டன.

இந்​திய தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த விவ​காரத்​தில் ஒன்​றாக இணைந்து ஓர் உத்தியை வகுப்​ப​தற்​காக, இண்​டியா கூட்​ட​ணி​யின் கூட்​டம் நேற்று டெல்​லி​யில் நடை​பெற்​றது. இக்​கூட்​டம் நடந்த இடத்​துக்கு வரும் வழி​யில் சாலை​யோரம் மற்​றும் ரவுண்​டானா பகு​தி​களில் பல அனாமதேய பேனர்​கள் வைக்​கப்​பட்​டிருந்​தன.

சிறிய அளவி​லான இந்த பேனர்​களில், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி உள்​ளிட்ட எதிர்க்​கட்​சித் தலை​வர்​களைக் குறி​வைத்​து, மிக​வும் அவதூறான கருத்​துகளும் இடம்​பெற்றிருந்தன. இந்த பேனர்​களில் மிகச் சுருக்​க​மாக இந்​தி​யிலும், ஆங்​கிலத்​தி​லும் இடம்​பெற்ற ஓரிரு வாசகங்​கள் எதிர்க்​கட்​சிகளை விமர்​சித்​தும், கிண்​டலடிக்​கும் வகை​யிலும் இருந்​தன.

ராகுல் காந்​தி​யின் புகைப்​படம் அடங்​கிய போஸ்​டர் ஒன்​றில், ’பிஹார் தேர்​தல் பிரச்​சா​ரத்​திலிருந்து 59 நாட்​கள் விலகி இருந்​து​விட்​டு, அவர் வெளி​நாட்​டில் மகிழ்ச்​சி​யாகப் பொழுதைக் கழித்தார்’ என்று குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. இதனுடன் கைகளில் பை மற்​றும் பெட்​டி​யுடன் ராகுல் செல்​வது போல் ஒரு புகைப்​பட​மும் இடம்​பெற்​றிருந்​தது.

ராகுல் காந்​தி, மம்தா பானர்​ஜி, கேஜ்ரி​வால், தேஜஸ்​வி, அகிலேஷ் யாதவ், உத்​தவ் தாக்​கரே இவர்​களு​டன் திமுக தலை​வர் ஸ்டா​லின் படமும் இடம்​பெற்று ஒரு பேனர் இருந்​தது. அதில், ‘வெற்றி பெற்றால் தேர்​தல் ஆணை​யத்​துக்கு கைதட்​டல், தோல்வி அடைந்தால் அதை ஒழிக்க வேண்​டும் எனக் குரல்’ என்ற வகையில் விமர்​சிக்​கப்​பட்​டிருந்​தது.

ஒரு சுவரொட்​டி​யில் அகிலேஷ் யாத​வின் கருத்து ஒன்று இடம்பெற்றிருந்​தது; அதில், 2012-ல் தனது கட்சி பெற்ற வெற்​றிக்கு தேர்​தல் ஆணை​யத்​தைப் பாராட்​டிய அவர், 2017-ல் அக்​கட்சி சந்தித்த தோல்விக்கு அதே தேர்​தல் ஆணை​யத்​தைக் கடுமை​யாக விமர்​சித்​திருந்​தார். இதை​யும் குறிப்​பிடும் வகை​யில் இரு​வகை​யான புகைப்​படங்​களும் குறிப்​பிடப்​பட்​டிருந்​தன.

இந்த அனாமதேய பேனர்​களால் இண்​டியா கூட்​ட​ணி​யின் கூட்​டம் தொடங்​கு​வதற்கு முன்​பாக அரசி​யல் விவாதங்​கள் எழும்​பின. எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் குறித்த இந்த விமர்​சனங்​களை எழுதியது யார்? என்ற விவரம் அவற்​றில் இல்​லை. இதன் மீது எதிர்க்​கட்​சிகளும்​ ஏனோ எந்​தப்​ புகாரை​யும்​ அளிக்​கவில்​லை.

SCROLL FOR NEXT