இந்தியா

டேங்கர் லாரி மீது வேன் மோதி விபத்து - மந்திராலயம் சென்ற 8 பேர் உயிரிழப்பு

பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

என். மகேஷ்குமார்

கர்னூல்: ஆந்திராவில் டேங்​கர் லாரி மீது வேன் மோதிய விபத்​தில் மந்​தி​ரால​யம் சென்ற பக்​தர்​கள் 8 பேர் உயி​ரிழந்​தனர்.

கர்​நாடக மாநிலம், சிக்​மங்​களூரு பகு​தியை சேர்ந்த பக்​தர்​கள் ஒரு வேனில் ஆந்​திர மாநிலம், கர்​னூல் மாவட்​டம், மந்​தி​ரால​யம் பகு​தி​யில் உள்ள ஸ்ரீ ராகவேந்​திரர் கோயிலுக்கு புறப்​பட்​டனர். இந்த வாக​னம் நேற்று அதி​காலை கர்​னூல் அருகே உள்ள மந்​தி​ரால​யம் சில​கலதோன் எனும் இடத்​தில் வந்த போது, எதிரே வந்த டேங்​கர் லாரி மீது வேக​மாக மோதி விபத்​துக்​குள்​ளானது.

இந்த கோர விபத்​தில் வேனில் பயணம் செய்த குமார் (60), தீபிகா வீணா (35), சுனில் (40), பெல்லி (3), மீனாட்சி (50) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்​திலேயே பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 16 பேர் படு​காயமடைந்​தனர்.

அவர்​கள் அனை​வரை​யும் ஆம்​புலன்ஸ் மூலம் எமிங்​க​னூரு அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூவரும் இறந்​தனர். இதனால் உயிரிழப்பு எண்​ணிக்கை 8 ஆக உயர்ந்​தது. இதே மருத்து​வ​மனை​யில் 13 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்​ததும் துணை குடியரசு தலை​வர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்​திர மோடி ஆகியோர் ஆழ்ந்த இரங்​கல்​களை தெரி​வித்​தனர். இறந்​தவர்​களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்​சம் நிதி உதவி வழங்​கு​வ​தாக பிரதமர் அறி​வித்​தார்.

மேலும், ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு​வும், விபத்து குறித்து அறிந்​ததும் அதிர்ச்சி அடைந்​து, சம்​மந்​தப்​பட்ட மாவட்ட ஆட்​சி​யர், எஸ்பி ஆகியோரிடம் நடந்த விவரங்​களை கேட்டறிந்தார். மேலும், படுகாயம் அடைந்த 13 பேருக்கும் சிறந்த சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT