அமராவதி: ஆந்திர மாநில நிதி அமைச்சர் வி.கிஷோர் நேற்று சட்டப்பேரவையில் ரூ.3,32,205 கோடியில் 2026-27 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில், ரூ.6 ஆயிரம் கோடி அமராவதி தலைநகர பணிகளுக்காகவும், மின்வாரியத்திற்கு ரூ.13,934 கோடியும், சாலை, துறைமுகம் மற்றும் விமான நிலையங்கள் அமைக்க ரூ.13,546 கோடியும், தொழிற்சாலை பணிகளுக்கு ரூ.3,161 கோடியும், விசாகப்பட்டினம் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.28,000 கோடியும், ராயலசீமா குளோபல் தோட்டக்கலை கிளப்புக்கு ரூ.30,000 கோடியும், வேளாண்மை மற்றும் அதன் துணை துறைகளுக்கு ரூ. 13,598 கோடியும், போலவரம் அணைக்கட்ட ரூ.6,105 கோடியும், உள்துறைக்கு ரூ.9,165 கோடியும், மதிய உணவு திட்டத்திற்கு ரூ.2,161 கோடியும், பள்ளிகல்வித் துறைக்கு ரூ.32,308 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
டிஜிட்டல் கைதுகள், ஆன்லைன் மோசடிகளை முழுமையாக ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சைபர் கிரைம் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. பெண்கள் பாதுகாப்புக்கு ‘சக்தி’ மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகார் செய்த 7 நிமிடங்களில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்துவர் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.