அமராவதி: பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு சாதனை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சமூக வலை தளத்தில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 25 ஆண்டு மக்கள் சேவை மகத்தானது. சரியான நேரத்தில், சரியான நபர், சரியான இடத்தில் பதவி வகிப்பது நம்முடைய நாட்டின் அதிர்ஷ்டம்.
அவரது உன்னதமான தொலைநோக்குப் பார்வையில் ‘விக்சித் பாரத்’ திட்டம் வீறுகொண்டு வெற்றிப் பாதையில் செல்கிறது. ஆந்திராவில் இரட்டை இன்ஜின் கொண்ட புல்லட் ரயில் சர்க்கார் மக்களுக்கு அடிப்படை வசதிகள், முதலீடு, வளர்ச்சி திட்டங்களை அதிவேகமாக அமல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றியவாறே முன்னோக்கி செல்வதை மிகப் பெருமையாகக் கொள்கிறேன். ஒரு தலைமுறையின் தலை எழுத்தை அழகாக மாற்றி அமைக்கும் அமைப்பு ஒரு சிலருக்கே அமையும். அது பிரதமர் மோடிக்கு அமைந்துள்ளது. அவருக்கு என் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.