ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

 
இந்தியா

நாட்டுக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளில் 25 சதவீதம் ஆந்திராவுக்கு வருகிறது: முதல்வர் சந்திரபாபு நாயுடு பெருமிதம்

செய்திப்பிரிவு

நெல்லூர்: நம் நாட்​டுக்கு வரும் முதலீடு​களில் 25 சதவீதம் ஆந்திரா​வுக்கு வரு​கிறது என ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பெரு​மிதம் தெரி​வித்​தார்.

ஆந்​திர மாநிலத்​தின் நெல்​லூர் புன்​னப​வாரி பாளை​யத்​தில் நேற்று நடை​பெற்ற ஒரு பொதுக்​கூட்​டத்​தில் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது:

எங்​கள் கூட்​டணி அரசு ஏழைகளுக்கு உறு​துணை​யாக நின்று அவர்​களின் வாழ்க்கை மேம்பட பல்​வேறு நலத்​திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறது.

ஏழ்​மையை ஒழிப்​ப​தையே ஒரே குறிக்​கோளாக கொண்டு பாடு​பட்டு வரு​கிறோம். மாதந்​தோறும் 1-ம் தேதி முதி​யோர், மாற்​றுத்​திற​னாளி​கள், விதவை​கள் உள்​ளிட்​டோருக்கு உதவித்​தொகை வழங்​கு​கிறோம். இதன் மூலம் 62.20 லட்​சம் பேர் பயனடைகின்​றனர்.

தொழில்​துறை வளர்ச்​சி​யில் ஆந்​திரா மிக​வும் முன்​னேற்​றப் பாதை​யில் சென்று கொண்​டிருக்​கிறது. ஆந்​தி​ரா​வின் கூடூரில் மெகா பர்​னிச்​சர் பார்க் அமைய உள்​ளது. இதன் மூலம் 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும். நாம் நாட்​டுக்கு வரும் வெளிநாட்டு முதலீடு​களில் 25 சதவீதம் ஆந்​தி​ரா​வுக்கு வரு​கிறது.

ஆந்​தி​ரா​வில் தொழில் தொடங்​கிய பலர் கடந்த ஆட்​சி​யில் வேறு மாநிலங்​களுக்​குச் சென்​றனர். ஆனால் இப்​போது நிலைமை தலைகீழாக உள்​ளது. பலர் தொழில் தொடங்க ஆந்​தி​ராவை தேடி வரு​கின்​றனர். அரசு நம்​பிக்​கையை ஏற்​படுத்தி தந்​த​தால் தொழில் தொடங்க வரிசை​யில் நிற்​கிறார்​கள். இவ்​வாறு சந்​திர​பாபு நா​யுடு பேசி​னார்​.

SCROLL FOR NEXT