ஆனந்த் மஹிந்திரா (உள்படம்) தொழில ​திபர் தீரஜ் ஜெயின்

 
இந்தியா

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கி தவித்த இந்தியர்களுக்கு உதவியவருக்கு ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐக்​கிய அரபு அமீரகத்​தில் சிக்​கித் தவித்த இந்​திய பயணி​களுக்கு உதவிய இந்​திய தொழில​திபருக்​கு, ஆனந்த் மஹிந்​திரா பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா​வின் தாக்​குதலுக்கு பதிலடி​யாக வளை​குடா நாடுகளில் உள்ள அமெரிக்க முகாம்​கள் மற்​றும் விமான நிலையங்​களை குறி​வைத்து ஈரான் ஏவு​கணை மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் துபாய் விமான நிலை​யம் மூடப்பட்​டது. விமானங்​கள் ரத்​தால் பயணி​கள் விமான நிலையங்களில் சிக்கி தவித்​தனர்.

          

அப்​போது துபா​யில் உள்ள ராஜஸ்​தானைச் சேர்ந்த தொழில ​திபர் தீரஜ் ஜெயின், அஜ்மன் பகு​தி​யில் உள்ள 11 படுக்கை அறை​கள் கொண்ட தனது பண்ணை வீட்​டில், இந்​திய பயணி​கள் இலவச​மாக தங்​கு​வதற்கு அனு​மதி அளித்​தார்.

தீரஜ் ஜெயினின் விருந்​தோம்பலை எக்ஸ் தளத்​தில் பாராட்​டி​யுள்ள தொழில​திபர் ஆனந்த் மஹிந்​தி​ரா, "சமீபத்​திய விமான ரத்​தால், இந்​திய குடும்​பங்​கள் துபா​யில் சிக்கி தவித்​த​போது தனது பண்ணை வீட்டை திறந்து விட்​டார் தீரஜ் ஜெயின். விருந்​தினர்​தான் கடவுள் என்ற இந்​திய பண்​பு, நாம் எங்கு சென்​றாலும் வரும் என்​பதை இது நினை​வூட்​டு​கிறது" என குறிப்​பிட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT