அசாம் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
திப்ரூகர்: அசாம் மாநிலம் திப்ரூகர் நகரில் நேற்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நடத்திய 'அட் ஹோம்' வரவேற்பு நிகழ்ச்சியில், அவர் வழங்கிய 'காமோசா'வை (பாரம்பரிய கைத்தறி துண்டை) ராகுல் காந்தி அணிய மறுத்ததன் மூலம் வடகிழக்கு இந்தியாவை அவமதித்துவிட்டார்.
வெளிநாட்டினர் உட்பட அனைத்து முக்கிய பிரமுகர்களும் மரியாதையின் அடையாளமாக அந்த துண்டை அணிந்திருந்தனர். ஆனால் ராகுல் காந்தி மட்டுமே அதை அணிய மறுத்த ஒரே நபர் ஆவார்.
ராகுல் அவர் விரும்பியதைச் செய்யலாம். ஆனால் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை, வடகிழக்கு இந்தியாவின் கலாச்சாரத்தை அவமதிக்க ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.