இந்தியா

நாடாளுமன்றத்தில் அமித் ஷா விளக்கம் அளிப்பார்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாணவர்கள் போராட்ட விவ​காரம் தொடர்​பாக மத்திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நாடாளு​மன்​றத்​தில் விளக்கம் அளிப்​பார் என்று நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு நிருபர்​களிடம் கூறிய​தாவது: எதிர்க்​கட்​சிகளின் கோரிக்​கையை ஏற்று மாணவர்​கள் போராட்ட விவ​காரம் தொடர்பாக அவை​யில் விவாதம் நடத்த தயா​ராக உள்​ளோம். இந்த விவாதத்​தின் இறு​தி​யில் உள்​துறை அமைச்​சர் அமித் ஷா விளக்​கம் அளிப்​பார். ஆனால் எதிர்க்​கட்​சிகள் அமைச்​சரின் பேச்சுக்கு இடையூறு விளைவிக்​கக்​கூ​டாது. அமை​தி​யாக அமர்ந்திருந்து அமைச்​சர் அமித் ஷாவின் பேச்சை கேட்க வேண்டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

4 மசோ​தாக்​கள் அறி​முகம்

மக்​களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சிகளின் அமளி​யால் மதி​யம் 12 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. மீண்​டும் அவை கூடிய​போது கூச்​சல், குழப்​பம் நீடித்​த​தால் பிற்​பகல் 2 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

பிற்​பகலில் அவை கூடிய​போது எதிர்க்​கட்​சிகளின் கடும் அமளிக்கு நடு​வே, தீர்ப்​பாயச் சீர்​திருத்த மசோதா 2026, சுரங்கங்கள் மற்​றும் கனிமங்​கள் (மேம்​பாடு மற்​றும் ஒழுங்​கு​முறை) திருத்த மசோதா 2026, கேரள மாநிலப் பெயர் மாற்ற மசோதா 2026 மற்​றும் தேசி​யக் கூட்​டுறவு மேம்​பாட்​டுக் கழக திருத்த மசோதா 2026 ஆகிய 4 மசோ​தாக்​கள் அறி​முகம் செய்யப்பட்​டன. இதில் தீர்ப்​பாயச் சீர்​திருத்த மசோதா 2026 விவாதம் இன்றி நிறைவேற்​றப்​பட்​டது. இதன் பிறகு எதிர்க்கட்சிகளின் அமளி அதி​க​மான​தால் நாள் முழு​வதும் மக்களவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

SCROLL FOR NEXT