இந்தியா

ஊடுருவலுக்கு துணை போகிறார்: மம்தா மீது அமித் ஷா புகார்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆதாயத்துக்காக வங்கதேசத்தினர் ஊடுருவலுக்கு மம்தா பானர்ஜி அரசு துணைபோகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

அமைச்சர் அமித் ஷா நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் வங்கதேசத்தினர் ஊடுருவல் தொடர்பாக மக்கள் கவலை அடைந்துள்ளனர். ஆனால் தேர்தல் ஆதாயத்துக்காக இங்குள்ள மம்தா அரசு ஊடுருவலுக்கு துணை போகிறது. மம்தா அரசு தேவையான நிலத்தை வழங்காததால் இந்தியா-வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணியை மத்திய அரசால் முடிக்க முடியவில்லை.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு, அவர்களை இங்கிருந்து வெளியேற்றுவோம். 2026-ல் மேற்கு வங்கத்தில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

SCROLL FOR NEXT