இந்தியா

மே.வங்கத்தில் திரிணமூல் ஆட்சிக்கு எதிராக ‘குற்றப் பத்திரிகை’ - அமித் ஷா வெளியிட்டார்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அடுத்த மாதம் 23 மற்​றும் 29 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக நடை​பெறுகிறது. முதல் கட்ட தேர்​தல் 152 தொகு​தி​களி​லும், 2-ம் கட்ட தேர்​தல் 142 தொகு​தி​களி​லும் நடை​பெறுகிறது.

இந்​நிலை​யில், கொல்​கத்​தாவுக்கு நேற்று வந்த மத்​திய அமைச்​சர் அமித் ஷா பத்​திரிக்​கை​யாளர்​கள் சந்​திப்பை நடத்​தி​னார். அப்​போது திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் கடந்த 15 ஆண்டு ஆட்​சிக்கு எதி​ரான ‘குற்​றப்​பத்​திரி​கை’யை வெளி​யிட்டு பேசி​ய​தாவது: முதல்​வர் மம்தா பானர்ஜி கடந்த 15 ஆண்​டு​களாக பொய், வன்​முறை மற்​றும் ஊழல் அரசி​யலைத்​தான் வளர்த்​தார்.

இந்த தேர்​தலில் மேற்​கு​வங்க மக்​கள் அச்​சம் மற்​றும் நம்​பிக்கை ஆகிய இரண்​டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்​டும். தனது அரசி​யலை முன்​னெடுக்க பொய் மற்​றும் வன்​முறையை பயன்​படுத்தி புது​வித அரசி​யலை மம்தா உரு​வாக்​கி​னார்.

          

இதை எதிர்த்து கடந்த 2011-ம் ஆண்டு முதல் பாஜக போராடிக் கொண்​டிருக்​கிறது. இந்த முறை பாஜக ஆட்சி அமைக்​கும் என நம்​பு​கிறேன். திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் 15 ஆண்டு கால ஆட்​சிக்கு எதி​ரான ‘குற்​றப்​பத்​திரி​கை​யுடன்’ நாங்​கள் வந்​துள்​ளோம். மேற்​கு​வங்க மக்​கள் சார்​பில் திரிண​மூல் காங்​கிரசுக்கு எதி​ராக இந்த குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​படு​கிறது.

மேற்​கு​வங்​கத்​தில் பாஜக அரசை அமைக்க வேண்​டும் என்ற முனைப்​புடன் பாஜக தொண்​டர்​கள் களம் இறங்​கி​யுள்​ளனர். மேற்​கு​வங்க தேர்​தல் நாட்​டின் பாது​காப்​புக்கு மிக முக்​கிய​மானது. அசாம் மாநிலத்​தில் பாஜக ஆட்சி அமைந்​த​பின், ஊடுரு​வல் முடிவுக்கு வந்​தது. தற்​போது நாட்​டில் மேற்கு வங்​கம் வழி​யாக மட்​டும்​தான் ஊடுரு​வல் நடை​பெறுகிறது.

எதிர்க்​கட்சி தலை​வர் சுவேந்து அதி​காரி மேற்கு வங்​கம் முழு​வதும் சுற்​றுப் பயணம் செய்​து, இங்கு நில​வும் ஒழுங்​கின்​மை, அராஜகம், பொருளா​தார வீழ்ச்​சி, ஊடுரு​வல் குறித்து மக்​களிடம் எடுத்​துரைப்​பார். திரிண​மூல் கட்​சி, மேற்கு வங்​கத்தை குற்​ற​வாளி​களின் கூடார​மாக மாற்​றி, தொழில் வளர்ச்​சி​யற்ற மாநில​மாக ஆக்​கி​விட்​டது. இவ்​வாறு அமித்​ ஷா கூறி​னார்​.

SCROLL FOR NEXT