இந்தியா

காயமடைந்தபோது உதவிய மும்பை மக்கள் - ‘அமேசிங் இந்தியன்ஸ்’ எனப் பாராட்டிய அமெரிக்கர்

செய்திப்பிரிவு

மும்பை: மும்பைக்கு சுற்றுலா வந்த அமெரிக்​கப் பயணி ஒரு​வர், எதிர்​பா​ராத​வித​மாக கால் இடறி விழுந்து கணுக்​காலில் காயமடைந்து வலி​யால் துடித்​தார். தன்​னிடம் செல​வுக்​குப் பணமில்லை என அவர் கூறியதைக் கேட்ட அப்​பகுதி மக்​கள், அரசு மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றனர்.

அவருக்​கு மருத்​து​வ​மனை​யில் எக்​ஸ்​-ரே எடுக்​கப்​பட்​டு, காயத்​துக்​குக் கட்​டுப் போடப்​பட்​டதோடு மட்​டுமன்​றி, இலவச​மாகவே சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. தன்​னிடம் கட்​ட​ணம் ஏதும் வாங்​காமல் சிகிச்சை அளித்த இந்​திய அரசு மருத்​து​வ​மனை​யின் சேவையைக் கண்டு அவர் வியப்​படைந்​தார்.

அமெரிக்​கா​வில் இதே சிகிச்​சைக்கு ஆயிரக்​கணக்​கான டாலர்​கள் செல​வாகும் என்று அவர் கூறி​னார். அமெரிக்​கா​வின் மருத்துவக்கட்​டமைப்​போடு ஒப்​பிடு​கை​யில் இந்​தி​யா​வின் சேவை நம்ப முடி​யாத அளவுக்​குச் சிறப்​பாக இருப்​ப​தாகப் பாராட்​டி​னார். இறு​தி​யில், தமக்கு உதவிய மும்பை மக்​களுக்​கும், அரசு மருத்துவமனைக்​கும் தனது நெஞ்​சார்ந்த நன்​றியைத் தெரிவித்துக்கொண்டார்​.

SCROLL FOR NEXT