இந்தியா

அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

ஜம்மு: தெற்கு காஷ்மீரில் இமயமலைப் பகு​தி​யில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்​துள்​ளது. இந்​துக்​களின் புனிதத் தலங்களில் ஒன்​றான இக்​கோ​யில் கடல் மட்​டத்​தில் இருந்து 3,888 மீட்​டர் உயரத்​தில் அமைந்​துள்​ளது. இக்​கோயி​லில் இயற்​கை​யாக தோன்​றும் பனி லிங்​கத்தை தரிசிக்க ஆண்​டு​தோறும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் புனித யாத்​திரை மேற்​கொண்டு வருகின்றனர்.

அனந்த்​நாக் மாவட்​டத்​தில் உள்ள பாரம்​பரி​யான 48 கி.மீ. தூர நுன்வான்​-பஹல்​காம் வழித்​தடம் மற்​றும் கந்​தர்​பால் மாவட்டத்தில் உள்ள குறுகிய ஆனால் செங்​குத்​தான 14 கி.மீ. தூரபல்​தால் வழித்தடம் மூல​மாக இந்த யாத்​திரை மேற்கொள்ளப்படு​கிறது.

இந்த ஆண்​டுக்​கான அமர்​நாத் புனித யாத்​திரை பஹல்​காம், பல்தால் அடிவார முகாம்​களில் இருந்து இன்று ஒரே நேரத்​தில் தொடங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. 57 நாட்​கள் நீடிக்​கும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 28-ம் தேதி நிறைவடைய உள்​ளது. இந்நிலையில் பஹல்​காம், பல்​தால் ஆகிய 2 முகாம்​களை நோக்கி ஜம்மு பகவதி நகர் யாத்ரி நிவாஸில் இருந்து முதல் பக்​தர்​கள் குழு நேற்று புறப்​பட்​டது. இவர்​களின் பயணத்தை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்​தார். முன்​ன​தாக பகவதி நகர் யாத்ரி நிவாஸில் சின்ஹா சிறப்பு பூஜைகளை மேற்​கொண்​டார்.

ஹர் ஹர் மகாதேவ் உள்​ளிட்ட பக்தி முழக்​கங்​களுக்கு மத்​தி​யில், 4,800-க்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் வாக​னங்​களில் புறப்​பட்​டுச் சென்றனர். இந்த ஆண்டு அமர்​நாத் யாத்​திரைக்கு 3.90 லட்சத்திற்கும் அதி​க​மான பக்​தர்​கள் பதிவு செய்​துள்​ளனர். அதே நேரத்​தில் ஜம்​முவுக்கு நேரடி​யாக வந்து பதிவு செய்​யும் வசதி​யும் தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் நிர்​வாகம் மற்​றும் பாது​காப்பு முகமை​கள் செய்​துள்ள பயண ஏற்​பாடு​கள் குறித்து பக்​தர்​கள்​ தங்களது திருப்​தியை வெளிப்​படுத்​தினர்​.

SCROLL FOR NEXT