ஸ்ரீநகர்: இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 28-ம் தேதி வரை 57 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த யாத்திரைக்கான பதிவு நாளை மறுநாள் 15-ம் தேதி முதல் தொடங்குகிறது.
காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் 3,888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் கோயில் அமைந்துள்ளது. இங்கு பனி லிங்கத்தைத் தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் யாத்திரை நடைபெறுகிறது. இந்த யாத்திரை ஜூலை 3-ம் தேதி ஆகஸ்ட் 28-ம் தேதி வரை 57 நாட்களுக்கு நடைபெறும் என காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்தார்.