மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

 
இந்தியா

அனைத்து மாநில சட்டப்பேரவைத் தொகுதிகள் 50 சதவீதம் அதிகரிக்கப்படும்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்​களவையை போன்று அனைத்து மாநிலங்​களின் சட்​டப்​பேரவைத் தொகுதி​களும் 50 சதவீதம் அதி​கரிக்​கப்​படும் என்று மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு தெரி​வித்​துள்​ளார்.

நாடாளு​மன்ற சிறப்பு கூட்​டத் தொடர் நாளை தொடங்​கு​கிறது. இதில் மகளிர் இடஒதுக்​கீடு அமலாக்​கம், மக்​களவை தொகுதி மறு​வரையறை தொடர்​பான மசோதாக்​கள் தாக்​கல் செய்​யப்​பட உள்​ளன. இது​குறித்து மத்​திய நாடாளு​மன்ற விவகாரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறி​யிருப்​ப​தாவது:

நாடாளு​மன்​றம், சட்​டப்​பேரவை​களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்​கீட்டை வழங்க மத்​தி​யில் ஆளும் பாஜக அரசு உறுதி​யாக உள்​ளது. இதன்​படி அனைத்து மாநிலங்​களி​லும் மக்​களவைத் தொகுதி​களின் எண்​ணிக்கை 50 சதவீதம் உயர்த்​தப்​பட உள்​ளது.

இது​தொடர்​பான புதிய மசோதாக்​கள் நாடாளு​மன்ற சிறப்பு கூட்​டத் தொடரில் தாக்​கல் செய்​யப்​படும். இதை அரசி​யல் கண்​ணோட்​டத்​துடன் அணுகக்​கூடாது. அனைத்து கட்​சிகளும் மசோதாக்​களுக்கு ஆதரவு அளிக்க வேண்​டு​கிறேன். குறிப்​பாக நாட்​டின் நலனை கருத்​தில் கொண்டு காங்​கிரஸ் மற்​றும் எதிர்க்​கட்​சிகள் ஆதரவு அளிக்க கோரு​கிறேன்.

ஒரே சீராக அனைத்து மாநிலங்​களி​லும் 50 சதவீத தொகுதி​கள் அதி​கரிக்​கப்​படுவ​தால் தென்​மாநிலங்​களுக்கு எவ்​வித பாதிப்​பும் ஏற்​படாது. ஒரு மாநிலத்​தில் 20 மக்​களவைத் தொகுதி​கள் இருந்​தால் அந்த மாநிலத்​துக்கு கூடுதலாக 10 தொகுதி​கள் கிடைக்​கும்.

அரசி​யல் சாசன திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026 ஆகியவை நாடாளு​மன்ற சிறப்பு கூட்​டத் தொடரில் தாக்​கல் செய்​யப்​படும். இதன்​மூலம் மக்​களவைத் தொகுதி​களின் எண்​ணிக்கை 50 சதவீதம் அதி​கரிக்​கப்​படும். இதேபோல அனைத்து மாநிலங்​களின் சட்​டப்​பேரவைத் தொகுதி​களின் எண்​ணிக்​கையும் 50 சதவீதம் அதி​கரிக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

தமிழகத்தில் 351 ஆக உயரும்

தமிழகத்​தில் தற்​போது 234 சட்​டப்​பேரவைத் தொகுதி​கள் உள்​ளன. ஐம்​பது சதவீத உயர்வு அடிப்​படை​யில் தமிழகத்​துக்கு கூடுதலாக 117 இடங்​கள் கிடைக்​கும். இதன்​மூலம் தமிழக பேரவைத் தொகுதி​களின் எண்​ணிக்கை 351 ஆக அதி​கரிக்க உள்​ளது.

ஒரு மாநிலத்​தில் அதி​கபட்​சம் 500 சட்​டப்​பேரவைத் தொகுதி​களுக்கு மேல் இருக்​கக்​கூடாது என்று அரசி​யலமைப்பு சட்​டம் 170-வது பிரி​வில் தெரி​விக்​கப்​பட்டு உள்​ளது. தற்​போது உத்​தர பிரதேசத்​தில் 403 சட்​டப்​பேரவைத் தொகுதி​கள் உள்​ளன. ஐம்​பது சதவீத உயர்வு அடிப்​படை​யில் அந்த மாநில பேரவைத் தொகுதி​களின் எண்​ணிக்கை 605 ஆக அதி​கரிக்க உள்​ளது. அந்த மாநிலத்தை இரண்​டாக பிரிக்க மத்​திய அரசு விரும்​பவில்லை. இதை கருத்​தில் கொண்டு சட்​டப்​பேரவைத் தொகுதி​களின் அதி​கபட்ச வரம்பு 650 ஆக அதி​கரிக்க முடிவு செய்​யப்​பட்டு உள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT