இந்தியா

மும்பையில் 20 பள்ளிகளை சீரமைக்கும் ஆலியா பட், ரன்பீர்

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு...

செய்திப்பிரிவு

மும்பை: பிரதமர் மோடியின் பிறந்​த​நாளை​யொட்டி மும்​பை​யில் உள்ள 20 பள்​ளி​களை தனது கணவரும், நடிகரு​மான ரன்பீர் கபூருடன் சேர்ந்து சீரமைக்க இருப்​ப​தாக நடிகை ஆலியா பட் அறிவித்​துள்​ளார்.

பிரதமர் மோடி நேற்று முன்​தினம் 76-வது பிறந்த நாளை கொண்டாடி​னார். இந்​நிலை​யில், பிரபல பாலிவுட் நடிகை​யான ஆலியா பட், பிரதமர் மோடி​யின் பிறந்​த​நாளை​யொட்டி மும்பையில் உள்ள 20 பள்​ளி​களை தனது கணவரும், நடிகரு​மான ரன்​பீர் கபூருடன் சேர்ந்து சீரமைக்க இருப்​ப​தாக அறி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “நமது பிரதமர் மோடிக்கு இனிய பிறந்​த​நாள் வாழ்த்​து​கள். இந்த நாளைக் குறிக்​கும் வகை​யிலும், ‘சேவா சங்​கல்ப் அபி​யான்’ என்கிற நல்ல காரி​யத்​துக்கு ஆதர​வளிக்​கும் வகை​யிலும், பிருஹன்​மும்பை மாநக​ராட்​சி​யின் பரிந்​துரைகளின்​படி 20 பள்ளிகளை சீரமைக்க நானும் ரன்​பீரும் உறு​தி​யளிக்​கிறோம். இதன் மூலம், நமது குழந்​தைகள் கற்​றுத் தேறு​வதற்கு பிரகாசமான, சிறந்த வசதி​கள் கொண்ட இடங்​களை உரு​வாக்க உதவு​வோம்” என குறிப்​பிட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT