இந்தியா

உ.பி.யில் ரத யாத்திரை பிரச்சாரம் தொடங்கினார் அகிலேஷ் யாதவ்

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேச சட்​டப்​பேர​வைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடை​பெற உள்​ளது. இதையொட்டி, ஒவ்​வொரு தொகுதியிலும் கட்​சி​யின் வாக்​கு​களை 27,000 அதி​கரிக்க வேண்டும் என்று சமாஜ்​வாதி கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவ் இலக்கு நிர்​ண​யித்​துள்​ளார்.

இதற்​காக, லக்​னோ​வில் இருந்து ரேபரேலி நோக்கி ‘பி.டி.ஏ. ரதயாத் திரை’ பிரச்​சா​ரத்​தைத் நேற்று தொடங்​கி​னார். கட்​சித் தொண்டர்களு​டன் சிவப்பு நிற பேருந்​துகளில் இந்​தப் பயணம் தொடங்​கியது. பிற்​படுத்​தப்​பட்​டோர், தலித்​கள் மற்​றும் சிறுபான்மை​யினரை உள்​ளடக்​கிய (பி.டி.ஏ.) கூட்​ட​ணியை மையமாகக் கொண்டு மத்​திய உத்தர பிரதேசத்​தில் கட்​சி​யின் பிரச்​சா​ரத்தை தீவிரப்​படுத்​தும் நடவடிக்​கை​யாக இது அமைந்துள்ளது.

முன்​ன​தாக, அகிலேஷ் யாதவ் லக்​னோ​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “பா​திக்​கப்​பட்ட, துயரத்​தில் உள்ள, அவம​திக்​கப்​பட்ட மக்​கள் பி.டி.ஏ.வுடன் இணைய வேண்​டும். அவர்​களின் வலியே அவர்​களை இணைக்​கும் பொது​வான காரணி​யாக உள்​ளது. பி.டி.ஏ. மக்​கள் பி.டி.ஏ. அரசை அமைத்து சமூக நீதியை நிலைநாட்டு​வார்​கள்” என்​றார்.

SCROLL FOR NEXT