இந்தியா

2024 தேர்தலில் இண்டியா கூட்டணி வென்ற தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்காளர்களை நீக்க திட்டம்: அகிலேஷ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

லக்னோ: உத்​தரபிரதேச முன்​னாள் முதல்​வரும், சமாஜ்​வாதி கட்​சித் தலை​வரு​மான அகிலேஷ் யாதவ் லக்​னோ​வில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறியதாவது:

நாடு முழு​வதும் உ.பி. உள்​ளிட்ட 12 மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப்​பணி​கள்​ (எஸ்​ஐஆர்) நடை​பெற்று வரு​கிறது. இது உடனடி​யாக நிறுத்​தப்​பட​வேண்​டும். கடந்த 2022 உ.பி. சட்​டப் பேர​வைத் தேர்​தலில் பாஜக 255 இடங்​களில் வெற்றி பெற்​றது. ஆனால், 2024 மக்​கள​வைத் தேர்​தலில் அந்​தக் கட்​சி​யால் 162 பேர​வைத் தொகு​தி​களில் மட்​டுமே முன்​னிலை பெற முடிந்​தது.

அதே நேரத்​தில் 2022 தேர்​தலில் 111 இடங்​களில் சமாஜ்​வாதி கட்சி வெற்றி பெற்​றது. 2024 மக்​கள​வைத் தேர்​தலில் எங்​கள் கட்சி 183 இடங்​களில் அதி​கப்​படி​யான வாக்​கு​களைப் பெற முடிந்​தது.

2022-ம் ஆண்டு தேர்​தலில் 2 இடங்​களில் வெற்றி பெற்ற காங்​கிரஸ் கட்​சி, மக்​கள​வைத் தேர்​தலில் 40 பேர​வைத் தொகு​தி​களில் அதிக வாக்​கு​களைப் பெற முடிந்​தது. இதன்​மூலம் இந்த எஸ்​ஐஆர் பணி​களைக் கொண்டு சதித்​திட்​டத்தை பாஜக செய​லாற்ற முனைகிறது.

கடந்த தேர்​தலில் காங்​கிரஸ், சமாஜ்​வாதி கட்​சிகள் வெற்றி பெற்ற அல்​லது முன்​னிலை​யில் இருந்த தொகு​தி​களில் இருந்து தலா 50 ஆயிரம் வாக்​கு​களை நீக்க பாஜக​வும், தேர்​தல் ஆணை​ய​மும் திட்​ட​மிடு​கின்​றன. எனவே, நமது கட்சி நிர்​வாகி​கள் விழிப்​புடன் பணி​யாற்றி நமது வாக்​காளர்​கள் பெயர்​களை விடு​ப​டா​மல் பார்த்​துக் கொள்ள வேண்​டும். எந்​த​வித முறை​கேடுக்​கும் நாம் இடம் கொடுக்​கக்​கூ​டாது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT