இந்தியா

8 போர்க் கப்பல்களை வாங்க ரூ.53,866 கோடியில் ஒப்பந்தம்: பொதுத் துறை நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தற்​சார்பு திட்​டத்தில் ரூ.53,866 கோடி​யில் 8 புதிய தலை​முறை போர்க் கப்பல்​களை வாங்​கும் ஒப்​பந்​தத்​தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்​திட்​டுள்​ளது.

இந்​திய ராணுவ தளவாட உற்​பத்​தி​யில் தற்​சார்பு (ஆத்​மநிர்​பார் பாரத்) திட்​டத்தை மேலும் வலுப்​படுத்த, இந்​திய கடற்​படைக்​காக 8 புதிய தலை​முறை போர்க்​கப்​பல்​களைக் கொள்​முதல் செய்வதற்காக ரூ.53,866 கோடி மதிப்​பிலான ஒப்​பந்​தங்​களில் பாது​காப்​பு அமைச்​சகம் கையெழுத்​திட்​டுள்​ளது.

இதன்படி, பொதுத்​துறை கப்​பல் கட்​டும் நிறு​வனங்​களான ஜிஆர்​எஸ்இ 5 போர்க்​கப்​பல்​களை​யும், கோவா ஷிப்​யார்ட் 3 போர்க்​கப்​பல்​களை​யும் கட்​ட​வுள்​ளன. இந்​திய கடற்​படை​யால் உள்​நாட்டிலேயே வடிவ​மைக்​கப்​பட்​டு, போட்டி ஏல நடை​முறை மூலம் பொதுத்​துறை நிறு​வனங்​கள் தேர்வு செய்​யப்​பட்டு உரு​வாக்கப்படும் முதல் போர்க்​கப்​பல் திட்​டம் இது. இந்த வரலாற்று சிறப்​புச் மிக்க ஒப்​பந்​தம் பாது​காப்​புத் துறைச் செய​லா​ளர் ராஜேஷ் குமார் சிங் முன்​னிலை​யில் கையெழுத்​தானது.

தற்​போது தயாரிக்​கப்பட உள்ள நவீன போர்க்​கப்​பலான கொர்​வெட், ஃபிரி​கேட் வகை போர்க்​கப்​பல்​களை விட அளவில் சற்று சிறியது. அதே​நேரம் அதிவேக​மாக இயங்​கக்​கூடிய, சக்​தி​வாய்ந்த ஏவு​கணை​கள் மற்​றும் ஆயுதங்​கள் பொருத்​தப்​பட்ட போர்க்​கப்​பல் ஆகும். நவீன ஏவு​கணை​கள், ரேடார் மற்​றும் சென்​சார் கருவி​கள் இதில் இடம்​பெறும். வான்​வழி, கடல் மேல்​மட்​டம் மற்​றும் நீருக்கடியில் உள்ள எதிரி​களின் இலக்​கு​களை ஒரே நேரத்​தில் தாக்கி அழிக்​கும் திறன் கொண்​டது.

கடலோரப் பாது​காப்​பு, நீர்​மூழ்கி எதிர்ப்​புப் போர், கடல்​சார் கண்காணிப்பு மற்​றும் வணி​கக் கடல் பாதைகளைப் பாதுகாக்கும் பணி​களில் இவை ஈடு​படுத்​தப்​படும். தற்​போது இந்திய கடற்​படை​யில் 18 முதல் 24 கொர்​வெட் வகை போர்க்​கப்​பல்​கள் சேவை​யில் உள்ள நிலை​யில், இந்த 8 புதிய போர்க்கப்பல்களின் சேர்க்கை இந்​தி​யா​வின் கடல்​சார் பாதுகாப்புத்​ திறனைப்​ பலமடங்​கு அதி​கரிக்​கும்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT