இந்தியா

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி திட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​பாஜக ஆட்சி செய்​யாத மாநிலங்​களி​லும் ரூ.5 லட்​சம் கோடிக்கு முதலீடு செய்​வதற்​கான திட்​டங்​களை அதானி குழு​மம் தயார் செய்​துள்​ளது.

காங்​கிரஸ் மற்​றும் பாஜக அல்​லாத பிற கட்​சிகள் ஆளும் மாநிலங்​களில் அதானி குழு​மம் தனது தொழில்​களை வேக​மாக​வும் பரவலாக​வும் விரி​வாக்​கம் செய்து வரு​கிறது. பொருளா​தார வளர்ச்​சி, உள்​கட்​டமைப்பு மேம்​பாடு மற்​றும் வேலை​வாய்ப்பு உரு​வாக்​கத்​திற்​காக தனி​யார் முதலீடு​களை மாநில அரசுகள் ஈர்த்து வரும் நிலை​யில், சுமார் ரூ. 5 லட்​சம் கோடி மதிப்​பிலான திட்​டங்​களை அதானி குழு​மம் செயல்​படுத்​தி​யும், அதற்​கான பணி​களை மேற்​கொண்​டும் வரு​கிறது.

ஒரு காலத்​தில் பாஜக​வுக்கு நெருக்​க​மான அமைப்​பாகப் பார்க்​கப்​பட்ட போதி​லும், தற்​போது சாலைகள், துறை​முகங்​கள், மின்​சா​ரம், புதுப்​பிக்​கத்​தக்க ஆற்​றல், சிமெண்ட் மற்​றும் தரவு மையங்​கள் என பல துறை​களில் அரசி​யல் எல்​லைகளைக் கடந்து அதானி குழு​மத்​தின் முதலீடு​கள் விரிவடைந்​துள்​ளன.

கர்​நாட​கா, தெலங்​கா​னா, கேரளா, தமிழ்​நாடு, பிஹார் மற்​றும் ஆந்​திர பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் இக்​குழு​மத்​தின் முதலீடு​களை ஈர்ப்​ப​தில் அதிக ஆர்​வம் காட்டி வரு​வ​தாக நம்​பத்​தகுந்த வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

மாநிலங்​கள் வாரி​யாக முதலீட்டு விவரங்​கள்: கர்​நாட​கா: பெங்​களூரு​வின் ஹெப்​பால் மற்​றும் சென்ட்​ரல் சில்க் போர்டு இடையே திட்​ட​மிடப்​பட்​டுள்ள 16.75 கி.மீ நீள​முள்ள வடக்​கு-தெற்கு சுரங்​கப் பாதை திட்​டத்​திற்​கான ஒப்​பந்​தப் புள்​ளி​யில் அதானி என்​டர்​பிரைசஸ் நிறு​வனம் மிகக் குறைந்த தொகை​யைக் குறிப்​பிடப்​பட்ட நிறு​வன​மாக உரு​வெடுத்​துள்​ளது.

ரூ.22,267 கோடி மதிப்​பிலான இத்​திட்​டம் இன்​னும் இறுதி செய்​யப்​பட​வில்​லை. முன்​ன​தாக, கர்​நாடக முதல்​வர் டி.கே. சிவகு​மாரை கவுதம் அதானி நேரில் சந்​தித்​துப் பேசி​னார். ஏற்​கெனவே உடுப்பி மின்​நிலை​யம், மங்​களூரு விமான நிலை​யம் ஆகியவை அதானி​யின் கட்​டுப்​பாட்​டில் உள்​ளன.

கேரளா: விழிஞ்​ஞம் சர்​வ​தேச துறை​முகத் திட்​டத்தை அதானி போர்ட்ஸ் நிறு​வனம் உரு​வாக்​கி​யுள்​ளது. முதல்​கட்​டத் திட்​டங்​களைத் தொடர்ந்​து, 2026 ஜனவரி​யில் இதன் இரண்​டாம் கட்ட வளர்ச்​சிப் பணி​களுக்​காக கூடு​தலாக ரூ.16,000 கோடியை முதலீடு செய்​வ​தாக அறி​வித்​துள்​ளது. இதன் மூலம் இத்​துறை​முகத்​தில் அதானி​யின் மொத்த முதலீடு ரூ.30,000 கோடியை எட்​டும். மேலும், திரு​வனந்​த​புரம் விமான நிலை​யம் மற்​றும் கொச்சி களமசேரி​யில் ரூ.600 கோடிக்​கும் அதி​க​மான செல​வில் ‘லாஜிஸ்​டிக்ஸ் பார்க்’ அமைக்​கும் பணி​களும் நடை​பெற்று வரு​கின்​றன.

தெலங்​கா​னா: காங்​கிரஸ் அரசு 2024 ஜனவரி​யில் தரவு மையங்​கள், ஆற்​றல் சேமிப்பு மற்​றும் பாது​காப்​புத் துறை உற்​பத்தி உள்​ளிட்ட துறை​களில் ரூ.12,400 கோடி முதலீட்​டிற்​கான 4 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​களை அதானி குழு​மத்​துடன் மேற்​கொண்​டுள்​ளது.

தமிழ்​நாடு: தமிழகத்​தில் 2024-ல் ரூ.42,700 கோடிக்​கும் அதி​க​மான மதிப்​பிலான புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​களை அதானி குழு​மம் அறி​வித்​தது. இதில் நீரேற்று மின் திட்​டங்​களுக்கு ரூ.24,500 கோடி​யும், தரவு மையத்​திற்கு ரூ.13,200 கோடி​யும், சிமெண்ட் ஆலைகளுக்கு ரூ.3,500 கோடி​யும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன. மேலும், சென்னை வெளிவட்​டச் சாலை​யின் பராமரிப்பு மற்​றும் சுங்​கக் கட்​ட​ணம் வசூலிக்​கும்​ உரிமை​யை​யும்​ ரூ.2,511 கோடிக்​கு அதானி என்​டர்​பிரைசஸ்​ பெற்​றுள்​ளது.

SCROLL FOR NEXT