இந்தியா

துப்பாக்கிச் சூட்டில் தப்பினார் நடிகர் டைகர் ஷெராப் - நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

மும்பை: மும்​பையில் நேற்று நடத்​தப்​பட்ட துப்​பாக்​கிச்​சூட்​டில் நடிகர் டைகர் ஷெராப் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பினார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராபின் மகன் டைகர் ஷெராப் (36). இவர் தற்​போது பாலிவுட்​டின் முன்​னணி இளம் நடிக​ராக உள்​ளார்.

மும்​பையில் நேற்று மாலை நடை​பெற்ற கால்​பந்து விளை​யாட்​டில் டைகர் பங்​கேற்​றார். அங்​கிருந்து ஜுஹு பகுதி​யில் உள்ள வீட்​டுக்கு அவர் காரில் திரும்​பிக் கொண்​டிருந்​தார்.

அவரது ஓட்​டுநர் காரை ஓட்​டினார். புஷ்பா பூங்கா பகுதி​யில் கார் வந்​த​போது மோட்​டார் சைக்​கி​ளில் வந்த 3 பேர், நடிகர் டைகர் ஷெராபை குறிவைத்து 5 ரவுண்​டுகள் துப்​பாக்​கி​யால் சர​மாரியாக சுட்​டனர்.

இதில் கார் ஓட்​டுநர் பலத்த காயமடைந்​தார். காருக்கு அருகே ஆட்டோ சென்று கொண்​டிருந்​தது. அந்த ஆட்டோ ஓட்​டுநரும் குண்டு காயம் அடைந்​தார்.

இரு​வரும் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். அதிர்​ஷ்ட​வச​மாக நடிகர் டைகர் ஷெராப் உயிர் தப்​பினார். வட​மாநிலங்​களில் பிரபலமாக உள்ள லாரன்ஸ் பிஷ்​னோய் ரவுடி கும்​பல், இந்த துப்​பாக்​கிச்​சூடு தாக்​குதலுக்கு பொறுப்​பேற்று உள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT