இந்தியா

ரூ.45 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரியை சிக்க வைத்த ஏசிபி

செய்திப்பிரிவு

மும்பை: ம​கா​ராஷ்டி​ரா​வின் பீட் பகுதி வனத்​துறை அதி​காரி​யாக ஸ்ரீநி​வாஸ் லிங்​கண்ணா லக்​மாவத் (40) பணி​யாற்றி வந்​தார்.

அவருக்கு கீழ் பணி​யாற்றி வரும் அலு​வலர் சில முறை​கேடு விவ​காரங்​களில் சிக்​கி​னார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​காமல் இருக்​க​வும், ஊதிய உயர்வு வழங்​க​வும் ஸ்ரீநி​வாஸ் லஞ்​சம் கேட்​டுள்​ளார். மேலும் வனத்​துறை அலு​வலர் கட்​டுப்​பாட்​டில் உள்ள பகு​தி​யில் மரம் நடும் திட்​டத்​தில் 12 சதவீத கமிஷன் வழங்க வேண்​டும் என்​றும் ஸ்ரீநி​வாஸ் கோரி​யுள்​ளார்.

இதுகுறித்து சம்​பந்​தப்​பட்ட வனத்​துறை அலு​வலர் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸில் (ஏசிபி) ரகசி​ய​மாக புகார் அளித்​தார். வனத்​துறை அதி​காரி ஸ்ரீநி​வாஸ் மொத்​தம் ரூ.45 லட்​சத்தை லஞ்​ச​மாக கோரி​னார். அவ்​வளவு பெரிய தொகையை திரட்​டு​வது கடினம் என்​ப​தால் ஏசிபி போலீ​ஸார் புதிய வியூ​கத்தை வகுத்​தனர்.

பெரிய பையின் மேற்​பகு​தி​யில் ரூ.5 லட்​சம் மதிப்​புள்ள ரூபாய் நோட்​டு​களை அடுக்​கினர். அந்த பையின் கீழ் பகு​தி​யில் ரூ.40 லட்சம் மதிப்​புள்ள போலி கரன்சி நோட்​டு​களை அடுக்கி வைத்தனர். வனத்​துறை அதி​காரி ஸ்ரீநி​வாஸின் வீடு மகாராஷ்டிரா​வின் சத்​ரபதி சாம்​பாஜி நகரில் உள்​ளது. அந்த வீட்டுக்கு நேரில் வந்து ரூ.45 லட்​சம் லஞ்​சத்தை வழங்க வேண்​டும் என்று வனத்​துறை அலு​வலரிடம் அவர் கூறி​யிருந்​தார்.

இதன்​படி நேற்று முன்​தினம் மதி​யம் ஸ்ரீநி​வாஸின் வீட்​டுக்கு சென்ற வனத்​துறை அலு​வலர், ரூ.5 லட்​சம் உண்​மை​யான கரன்சி மற்​றும் ரூ.40 லட்​சம் போலி கரன்சி நோட்​டு​கள் அடங்​கிய பையை அவரிடம் வழங்​கி​னார். அப்​போது வீட்​டுக்​குள் திடீரென நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார், ஸ்ரீநி​வாஸை கையும்​ களவுமாக கைது செய்தனர்.

SCROLL FOR NEXT