இந்தியா

கேரள கல்​லூரி​யில் ஏபிவிபி அமோக வெற்றி

செய்திப்பிரிவு

திரு​வனந்​த​புரம்: கேரள மாநிலம், திருப்​புணித்​துறா நகரில் உள்ள அரசு சமசுகிருதக் கல்லூரி​யில் மாணவர் சங்​கத் தேர்​தல் நடை​பெற்​றது. இதில், பாஜக​வின் சித்​தாந்த அமைப்​பான ஆர்எஸ்எஸ் அமைப்​பின் மாணவர் பிரி​வான அகில பார​திய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி ), அனைத்து முக்​கிய பதவி​களை​யும் கைப்​பற்​றி​யுள்​ளது.

இதன்​மூலம், பல ஆண்​டு​களாக கல்​லூரி மாணவர் சங்​கத்தை நிர்வகித்து வந்த இந்​திய மாணவர்​கள் கூட்​டமைப்பு (எஸ்எஃப்ஐ) முதல் முறை​யாக அனைத்து பதவி​களை​யும் இழந்​துள்​ளது. எஸ்எஃப்ஐ-​யின் கோட்​டை​யாகக் கருதப்​பட்ட இந்​தக் கல்​லூரி​யில் ஏபிவிபி பெற்​றுள்ள இந்த வெற்​றி, கேரள மாணவர் அரசி​யலில் முக்​கிய மாற்​ற​மாகப் பார்க்​கப்​படு​கிறது.

தலை​வர் பதவிக்கு ஸ்நிக்தா எம். ஹரி, துணைத் தலை​வ​ராக ஆதித்யா டி.ஏ. பொதுச் செய​லா​ள​ராக விக்​னேஷ் பட் தேர்வு செய்யப்​பட்​டனர். எஸ்​.எஃப்​.ஐ. தலை​மையி​லான முந்​தைய மாணவர் சங்​கங்​கள் சம்​ஸ்​கிருத மொழியை மேம்​படுத்​தத் தவறிய​தாக​வும், மாணவர்​களிடம் வசூலிக்​கப்​பட்ட நிதி பயன்​படுத்​தப்​பட்ட விதம் குறித்து கேள்வி​கள் இருப்​ப​தாக​வும் ஏபி​விபி குற்​றம்​சாட்​டி​யுள்​ளது.

இதனிடையே, திருப்​புணித்​துறா நகராட்​சி​யை​யும் அண்​மை​யில் பாஜக கைப்​பற்​றி​யிருந்​தது. 45 ஆண்​டு​களாக இடது​சா​ரி​கள் வசம் இருந்த நகராட்சி பாஜக வசமான நிலை​யில், தற்​போது கல்​லூரி மாணவர் சங்​கத்​தி​லும் ஏபி​விபி வெற்​றி பெற்​றுள்​ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT