இந்தியா

உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆதார் தரவுத்தளத்தின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் தேசிய அளவில் தூய்மைப்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இறந்த 2 கோடி நபர்களின் ஆதார் எண்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், ‘மை ஆதார்’ இணையதளத்தில் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களை சேர்ந்த ஆதார் அட்டைதாரர்கள் குடும்ப உறுப்பினரின் மரணத்தைப் பதிவு செய்யலாம்.

எஞ்சியுள்ள மாநிலங்களையும் ‘மை ஆதார்’ தளத்தில் ஒருங்கிணைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT