திருமலை: திருமலையில் ஆட்டோ வசதி இல்லை. டாக்ஸிகள் மற்றும் இலவச பேட்டரி பேருந்துகளையே பக்தர்கள் நம்பி உள்ளனர். தற்போதுள்ள 18 இலவச பேட்டரி பேருந்துகள் போதவில்லை.
ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் 25 பேட்டரி பேருந்துகளும், பாரத் பையோடெக் பவுண்டேஷன் நிறுவனம் சார்பில் 7 பேட்டரி பேருந்துகளும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இதனை முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த பிரம்மோற்சவத்தின் போது தொடங்கி வைத்தார். இவைகளுக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வந்த பின்னர் பயன்பாட்டுக்கு வரும். அப்போது 50 பேட்டரி பேருந்துகள் திருமலையில் 3 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட உள்ளன.