புதுடெல்லி: புதிய நாடளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயத்தை நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டை சிறப்பிக்கும் வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயத்தின் ஒருபுறத்தில் அசோக சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் கீழே ‘சத்தியமேவ ஜெயதே’ என்றும் சின்னத்தின் இடதுபுறத்தில் ‘பாரத்’ என்று தேவநாகரி எழுத்துருவிலும் வலதுபுறத்தில் ‘இந்தியா’ என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட் டுள்ளது.
நாணயத்தின் மறுபக்கத்தில் புதிய நாடாளுமன்ற வளாகம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் மேற்புறத்தில் ‘சன்சி சன்குல்’என்று தேவநாகரி எழுத்துருவிலும் கீழ்புறத்தில் ‘பார்லிமென்ட் காம்ப்ளக்ஸ்’ என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயம் அச்சிடப்பட்டிருக்கும் ஆண்டான ‘2023’ குறிப்பிடப்பட்டுள்ளது.
50 சதவீதம் வெள்ளி
வட்டவடிவில் இருக்கும் இந்நாணயத்தின் விட்டம் 44 மில்லிமீட்டர் ஆகும். எடை 35 கிராம். இந்நாணயம் 50% வெள்ளி, 40%தாமிரம், 5% நிக்கல், 5% துத்தநாகம் கலவையால் உருவாக்கப்பட்டுள்ளது.